பிக் பாஸ் நிகழ்ச்சியானது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என ஒவ்வொரு மொழியிலும் ரசிகர்களை வசியப்படுத்தி வைத்துள்ளது. அந்த வகையில் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் கடந்த ஐந்து வருடங்களாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கியுள்ளது.
இதில் கலந்துகொண்டுள்ள 17 போட்டியாளர்களில் நடிகை அன்சிபா ஹாசன் ஒருவர்தான் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்தவர், திரிஷ்யம் படத்தில் மோகன்லாலுக்கு மூத்த மகளாக நடித்து கதையின் முக்கிய பிரச்சனைக்கு காரணமாக அமைந்தாரே அவர்தான் இந்த நடிகை. தற்போது துபாயில் ஆர்ஜே ஆக பணியாற்றி வரும் இவர் வந்த இடத்தில் பிக் பாஸ்க்கு அழைப்பு வரவே படக்கென பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து விட்டார்.
இந்த நிகழ்ச்சியின் நுழைவு நாளன்று தனது ரீல் தந்தையான மோகன்லாலுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பாக உரையாடினார். அப்போது மோகன்லாலிடம் மெதுவாக சென்று அந்த வருணின் டெட் பாடியை எங்கே மறைத்து வைத்துள்ளீர்கள் என்பதை எனக்கு மட்டும் சொல்லுங்கள் என்று கேட்க, அதற்கு. “நேரம் வரும்போது உன்னிடம் சொல்கிறேன் என்று பதிலுக்கு தமாசாக கூறினார் மோகன்லால்.
மேலும் தன் பங்கிற்கு அன்சிபாவிடம் பேசிய மோகன்லால், “பிக் பாஸ் வீட்டிற்குள் போனதும், என்ன நடந்தது என உன்னை துருவித் துருவி கேட்பார்கள் எதுவுமே நடக்கவில்லை என்பதை மெயின்டெயின் பண்ணிக்கொள்” என்று திரிஷ்யம் படத்தில் இருவரும் பேசிக்கொண்ட வசனங்களை இங்கே பேசி பார்வையாளர்களிடம் கலகலப்போட்டினார்கள்.