தமிழ் திரை உலகில் அவ்வப்போது சில முக்கிய நடிகைகளை பற்றி சில நேரம் பத்திரிகையாளர்களோ, சில நேரம் யூட்யூப் விமர்சகர்களோ அல்லது சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களோ ஏதாவது விமர்சித்து பேசுவதும் கருத்து பதிவிடுவதும் உண்டு. சில நேரங்களில் திரையுலகில் இருப்பவர்களை கூட இதுபோன்று நடிகைகள் பற்றி தேவையில்லாத விஷயங்கள் பேசி சர்ச்சைகளில் சிக்குவார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா பற்றி ஏதோ பேசப்போக, மிகப்பெரிய அளவில் திரையுலகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட மன்சூர் அலிகான் அதற்காக மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் கூவத்தூர் ரிசார்ட்டில் நடந்த அரசியல் கூத்து பற்றி கூறும்போது, நடிகை திரிஷா அங்கே விலை பேசி அழைத்து வரப்பட்டார் என்று கூறி இன்னொரு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
ஆனால் மன்சூர் அலிகான் பேசியபோது ஏற்பட்ட கொதிப்பு இந்த முறை பெரிய அளவில் ஏற்படவில்லை. இந்த நிலையில் தான் சவுக்கு மீடியா நடத்தி வரும் சவுக்கு சங்கர் என்பவர் நடிகை நிவேதா பெத்துராஜ் மீது, இல்லையில்லை உதயநிதி ஸ்டாலின் மீது ஒரு குற்றச்சாட்டை வைக்கும் விதமாக ஒரு பதிவிட்டிருந்தார்.
அதன்படி உதயநிதி ஸ்டாலின் தன்னுடன் நடித்த நடிகை நிவேதா பெத்துராஜ்க்கு துபாயில் 50 கோடி ரூபாய் மதிப்பில் பிளாட் வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்றும், பட வாய்ப்பு இல்லாத நிவேதா பெத்துராஜ் மாதம் இருமுறை சென்னை வந்து உதயநிதியை சந்தித்து விட்டு செல்கிறார் என்றும் கூறியிருந்தார். சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதுபற்றி கேட்கப்பட்ட போது கூட நான் சொன்னதில் உறுதியாக இருக்கிறேன்.. என் மீது தவறு என்றால் நீதிமன்றம் செல்லட்டும் அங்கே நான் பார்த்துக் கொள்கிறேன்.. என்னிடம் ஆதாரங்கள் இருக்கிறது என்று கூறி வருகிறார்.
சவுக்கு சங்கர் போன்றவர்கள் பெரும்பாலும் அரசாங்க ரீதியாக ஆதாரங்களை பெறுவதில் வல்லவர்கள். இப்படி உதயநிதி, நடிகை நிவேதா பெத்துராஜ் குறித்து ஏதோ ஆதாரம் அவரிடம் வலுவாக சிக்கி இருப்பதால் தான் அவர் இப்படி தைரியமாக பேசுகிறார்.. உதயநிதி தரப்பிலிருந்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படாதபோது நாம் ஏன் முந்திக்கொண்டு நிவேதா பெத்துராஜுக்காக குரல் கொடுக்க வேண்டும்.. அவர் என்ன திரிஷாவா, நயன்தாராவா ? போனால் போகட்டும் என்கிற மனப்போக்கில் இருக்கிறார்களாம் நடிகர் சங்கத்தினர்.