பெரும்பாலும் சினிமாவில் நடிக்கும் பிரபல நடிகர்கள் யாருமே தங்களது வீட்டில் உள்ளவர்களை படப்பிடிப்பிற்கு கூட அழைத்துச் செல்வது ரொம்பவே குறைவுதான். அதே சமயம் படம் முடிவடைந்து ரிலீசுக்கு முன்போ அல்லது ரிலீசின் போதோ தங்களது குடும்பத்தை அழைத்து, தான் நடித்த படத்தை காட்டுவார்கள். காரணம் முதல் ரசிகர்கள் அவர்கள்தான் என பல ஹீரோக்கள் நம்புகிறார்கள்.
ஆனால் ஒரே ஒரு பிரபல ஹீரோ மட்டும் தான் நடித்த படத்தை தனது மகளே பார்க்கக்கூடாது என ஒரு கொள்கையை கட்டாயமாக பின்பற்றி வருகிறார். அவர் வேறு யாருமில்லை. மலையாள நடிகர் பிரித்திவிராஜ் தான். அவரைப் பொறுத்தவரை விதவிதமான ஆக்சன் ஹாரர் படங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் தாதாவாக நடித்து வருகிறார்.
இப்படிப்பட்ட படங்களை தனது ஒன்பது வயதான மகள் பார்க்கும்போது மற்றவர்களைப் போல தன்னை ஹீரோவாக நினைக்காமல் தன்னுடைய தந்தை தானே என்கிற நினைப்பில் படம் பார்க்கும்போது அது, தனது மகளிடம் வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது, தனது தந்தை இப்படிப்பட்டவரா என்கிற ஒரு புதிய கோணத்தை உண்டாக்கி விடக்கூடாது என்பதற்காக இப்போதுவரை தனது படத்தை தனது மகள் பார்க்க கூடாது என ஒரு விஷயத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகிறாராம்.