spot_img
HomeNewsஆஸ்தான கேமராமேனை பிரிந்த விஜய் ; சேர்த்து வைத்த விசா

ஆஸ்தான கேமராமேனை பிரிந்த விஜய் ; சேர்த்து வைத்த விசா

 

இயக்குனர் ஏ.எல் விஜய் எப்படியும் வருடம் தவறாமல் ஒரு படமாவது இயக்கி விடுவார். அந்த வகையில் இந்த வருடம் அவர் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த அச்சம் என்பது இல்லையே என்கிற படம் வெளியாகி ஓரளவு வரவேற்பையும் பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக மாதவன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் விஜய்.

இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. வழக்கமாக இயக்குனர் விஜய்யின் படங்களில் அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருபவர் நீரவ்ஷா தான். இந்த நிலையில் தற்போது மாதவனை வைத்து இயக்கும் படத்திற்கு வேறு ஒரு புதிய ஒளிப்பதிவாளரை ஒப்பந்தம் செய்தாராம் ஏ எல் விஜய்.

படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பும் சமயத்தில் அனைவருக்கும் விசா கிடைத்துவிட, ஒளிப்பதிவாளருக்கு மட்டும் விசா கிடைப்பது சிக்கல் ஏற்பட்டதாம். ஆனாலும் படப்பிடிப்பு தேதியை மாற்றி வைக்க முடியாது என்பதால் மீண்டும் தனது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஆன நீரவ்ஷாவையே அழைத்துக் கொண்டு லண்டன் சென்று தற்போது படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம் இயக்குனர் விஜய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img