spot_img
HomeNewsவிஜய்யின் அரசியல் குறித்து எனக்கு கவலையாக இருக்கிறது ;  விஷால் பட தயாரிப்பாளர் எதிர்ப்பு

விஜய்யின் அரசியல் குறித்து எனக்கு கவலையாக இருக்கிறது ;  விஷால் பட தயாரிப்பாளர் எதிர்ப்பு

 

விஜய் முன்னணி நடிகராக இருக்கும் இந்த சமயத்தில் தான் தனது அரசியல் கட்சி குறித்து அறிவிப்பையும் வெளியிட்டார். இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டு 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறிவிட்டார். விஜய் சார்ந்த, விஜய்யுடன் பழகிய திரையுலகை சேர்ந்த நண்பர்கள் வட்டாரத்தில் அவரது இந்த அறிவிப்புக்கு ஒரு பக்கம் வரவேற்பும் இன்னொரு பக்கம் அவர் சினிமாவை விட்டு செல்கிறேன் என்று கூறுகிறாரே என்கிற வருத்தமும் ஒன்றாகவே இருக்கிறது.

அதே சமயம் திரையுலகிலிருந்து யாரும் அவருடைய அரசியல் வருகையை எதிர்த்து பேசியதாக இதுவரை தகவல் இல்லை. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் விஜய். இது முதன்முறையாக மத்திய அரசை விமர்சித்து அவர் வெளியிடும் அறிக்கை என்பதால் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கிண்டலாகவும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் திரை உலகில் இருந்தே இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

விஷால் நடித்த மார்க் ஆண்டனி என்கிற படத்தை தயாரித்த தயாரிப்பாளர் வினோத் என்பவர், “விஜய் இவ்வாறு கூறியிருப்பதை பார்க்கும்போது அவரது அரசியல் குறித்து எனக்கு கவலை ஏற்படுகிறது. இனி ஒரு அரசியல்வாதியாக அவரை நான் பின் தொடர போவதில்லை. ஒரு நடிகராக மட்டுமே அவரை நான் பார்க்கப் போகிறேன்” என்று விமர்சித்து கருத்து கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img