spot_img
HomeNewsகிராமத்தில் குளிப்பதற்கு மினரல் வாட்டர் கேட்டு படப்பிடிப்பை விட்டு ஓடிய நடிகைக்கு திருமணம்

கிராமத்தில் குளிப்பதற்கு மினரல் வாட்டர் கேட்டு படப்பிடிப்பை விட்டு ஓடிய நடிகைக்கு திருமணம்

 

சினிமாவில் ஒன்று இரண்டு படங்கள் ஓடி விட்டாலே ஹீரோக்களை விட அந்த படத்தின் கதாநாயகிகள் பண்ணும் அட்ராசிட்டிகள் அளவிட முடியாதது. முதல் படத்திற்கு ஆட்டோவில் வந்து இறங்கியவர்கள் அடுத்த படத்திற்கு தங்களுக்கு சொகுசு கார் ஒன்றை அனுப்ப சொல்லி நிபந்தனை விதிக்கும் அளவிற்கு மாறிவிடுவார்கள். ஒரு சில நடிகைகள் மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு.

அப்படி கடந்த 20 வருடங்களுக்கு முன்பு எஸ் ஜே சூர்யா இயக்கி நடித்த அன்பே ஆருயிரே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிலா. இவரை அர்ஜுன், வடிவேலு இணைந்து நடித்த மருதமலை படத்தின் காமெடி காட்சிகளில் கதாநாயகியாக நீங்கள் பார்த்திருப்பீர்கள்,

அந்த சமயத்தில் இவருக்கு வரவேற்பு இருந்ததால் நிறைய படங்கள் ஒப்பந்தமானது. அப்படி தென் மாவட்டத்தில் ஒரு படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்குள்ள விவசாய நிலத்தில் உள்ள குளியல் தொட்டியில் இவர் குளிக்க வேண்டிய காட்சியை படமாக்க வேண்டி இருந்தது. ஆனால் அங்கு இருந்த நீரில் குளிக்க மாட்டேன் என அடம் பிடித்த அவர், எனக்கு மினரல் வாட்டர் தான் வேண்டும், அதைக் கொண்டு வந்து இந்த தொட்டியை நிரப்புங்கள் என்று கூறி அடாவடி செய்தார்.

இவர் செய்த பிரச்சினையால் அன்று படப்பிடிப்பே நின்று போனது. அன்றிரவே சொல்லாமல் கொள்ளாமல் அவர் சென்னைக்கு ஓடிவந்து அதன் பிறகு பெரிய பஞ்சாயத்தே நடந்தது. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தவர் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி சென்று விட்டார்.

இந்த நிலையில் தற்போது தனது நீண்ட கால காதலர் ரக்ஷித் என்பவரை திருமணம் செய்துள்ளார் நிலாவிற்கு இப்போது என்ன வயது தெரியுமா ? 40. அநேகமாக இவ்வளவு அதிக வயதில் தனது முதல் கல்யாணத்தை முடிப்பவர் நிலாவாக தான் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img