spot_img
HomeNewsஎதுக்கு இவ்வளவு பெருசா ? சுருக்கு.. தனுஷின் அடடே ஐடியா

எதுக்கு இவ்வளவு பெருசா ? சுருக்கு.. தனுஷின் அடடே ஐடியா

 

தனுஷ் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு தனது மனைவி இயக்கத்தில் 3 என்கிற படத்தில் நடித்தபோது தனது மனைவியை இயக்குனர் ஆக்கியது மட்டுமல்ல.. அவரது உறவினரான அனிருத்தையும் அந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு இப்போது வரை அனிருத் ஏறுமுகத்தில் தான் சென்று கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தனுஷ் குடும்பத்திலிருந்து தற்போது இன்னொரு நபர் சினிமாவில் அறிமுகம் ஆகிறார்.. இது யார் என்றால் தனுஷின் அக்கா மகன் தான். இந்த படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சுத்த தமிழில் இருந்தாலும் நீளமான டைட்டில் என்பதால் படக்குழுவினர் பலரும் இந்த டைட்டிலை மற்றவர்களிடம் சொல்வதற்கு சிரமப்படுகிறார்கள் என்பதற்காக இதை ஆங்கில எழுத்துக்களில் சுருக்கி நீக் (NEEK) என்கிற பெயரை வைத்துள்ளாரம் தனுஷ்.  படக்குழுவினர் அனைவரும் தற்போது யாரிடம் பேசினாலும் நாங்கள் நீக் படத்தில் பணியாற்றுகிறோம் என்றே பேசுகிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img