spot_img
HomeNewsமீண்டும் மனதை திருடுமா இந்த காமெடி கூட்டணி ?

மீண்டும் மனதை திருடுமா இந்த காமெடி கூட்டணி ?

 

நடிகர் வடிவேலுவின் காமெடிகள் இன்றும் இணையதளத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகின்றன. ஆனால் சமீபகாலமாக அவர் நடித்து வரும் படங்களில் காமெடி என்கிற பெயரில் அவர் அடிக்கும் கூத்துக்களை இதே ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இத்தனைக்கும் மாமன்னன் படத்தில் அவர் வெளிப்படுத்திய குணச்சித்திர நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். இதனால் வடிவேலுவை தேடி பலரும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் கொண்ட கதைகளையே சொல்வதற்காக வந்தார்கள். ஆனால் அவர்களை எல்லாம் விரட்டி அடித்து விட்டாராம் வடிவேலு.

மீண்டும் காமெடியில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்த சமயத்தில் தான் பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வடிவேலுவை தேடி வந்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்திருந்தாலும் மனதை திருடி விட்டாய் படத்தில் பிரபுதேவா, வடிவேலு, விவேக் என்கிற காம்பினேஷன் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இன்றளவும் ரசித்து சிரிக்கும் வகையிலான காமெடியாக அந்த படம் நிலைத்து நின்று விட்டது. இப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் படமும் ரசிகர்களின் மனதை திருடும் விதமாக இருக்குமா ? பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img