spot_img
HomeNewsஇந்தியன் படத்தின் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கூட வாய்ப்பு கிடைக்கல இந்தியன் 2 வில் தேடி வந்த...

இந்தியன் படத்தின் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கூட வாய்ப்பு கிடைக்கல இந்தியன் 2 வில் தேடி வந்த முக்கிய கதாபாத்திரம்

ஷங்கர் இயக்கத்தில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் இந்தியன். இரண்டு படங்களை இயக்கி வெற்றி பெற்ற ஷங்கர் மூன்றாவதாக இப்படி ஒரு படத்தை கொடுப்பார் என யாரும் நினைக்கவில்லை. லஞ்சத்துக்கு எதிராக அவர் இயக்கிய இந்த படம் தமிழகமெங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பே இந்தியன் 2 படத்தையும் துவங்கி நீண்ட நாட்களாக எடுத்து வருகிறார் ஷங்கர். இந்த படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகிறார்கள். அதில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனியும் ஒருவர். இந்த படத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள கதாபாத்திரத்தை அவரை மனதில் வைத்து எழுதினாராம் ஷங்கர்.
இது பற்றி சமீபத்தில் சமுத்திரக்கனி கூறும்போது, “சினிமாவிற்குள் நுழைந்து வாய்ப்பு தேடிய காலகட்டத்தில் இந்தியன் படத்தில் நடிப்பதற்காக துணை நடிகராக பெயர் கொடுப்பதற்காக வரிசையில் நின்று அதைக்கூட கொடுக்க முடியாமல் போன காலகட்டம் உண்டு. ஆனால் இன்று அதே இயக்குனரின் இந்தியன் 2 படத்தில் அவர் எழுதிய ஒரு கதாபாத்திரத்திற்கு நான் தான் நடிக்க வேண்டும் என அவரே கேட்டுக் கொண்டதை என்னவென்று சொல்வது ? காலம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது” என்று கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img