spot_img
HomeNewsராஷ்மிகாவுக்கு செல்லப்பெயர் வைத்து அழைக்கும் பிரபல ஹீரோவின் தம்பி

ராஷ்மிகாவுக்கு செல்லப்பெயர் வைத்து அழைக்கும் பிரபல ஹீரோவின் தம்பி

நடிகை ராஷ்மிகா மந்தனாவை பொருத்தவரை தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட்டிலும் புகழ்பெற்ற நடிகையாக மாறிவிட்டார். அந்த வகையில் தற்போது பிஸியான நடிகையாக மாறி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மாறி மாறி நடித்து வருகிறார் ராஷ்மிகா.
எஸ்.ஜே சூர்யா படத்தில் சொன்னது போல, “இருக்கு.. ஆனா இல்ல” என்கிற வசனத்திற்கு பொருத்தமாக ராஷ்மிகாவும் அவருடன் இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டாவும் இப்போதும் காதலிக்கிறார்களா, இல்லை நட்பாக இருக்கிறார்களா? காதல் இருக்கா இல்லையா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இவர்களது நட்பு இருந்து வருகிறது.
இவர்கள் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டு வருகிறார்கள். வெளிநாட்டு சுற்றுலாவுக்கு தனித்தனியாக சென்றாலும் கூட இவர்கள் தங்கி இருந்த இடங்கள், இவர்கள் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து இவர்கள் ஒன்றாகத்தான் சென்று இருக்கிறார்கள் என்று ரசிகர்களே கண்டுபிடிக்கும் அளவிற்கு இவர்கள் நட்பு இருக்கிறது.
அதுமட்டுமல்ல ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டாவிடமும் நட்பாக இருக்கிறார், தனது செல்லப்பிள்ளை போல அவரை கவனித்துக் கொள்கிறார், அவர் நடிக்கும் படங்களின் விழாக்களில் மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து சென்று கலந்து கொள்கிறார், அவரது பிறந்தநாளுக்கு தவறாமல் வாழ்த்துக்கள் சொல்கிறார்,
அப்படி சமீபத்தில் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியிருந்தார் ராஷ்மிகா, பதிலுக்கு அவருக்கு நன்றி கூறிய ஆனந்த் தேவரகொண்டா, “நன்றி ருஷி’ என்று ரஷ்மிகாவை செல்லமாக குறிப்பிட்டு இருந்தார். ஹீரோவின் தம்பியே இந்த அளவுக்கு செல்லமாக குறிப்பிடும் அளவிற்கு ராஷ்மிகா இருக்கிறார் என்றால் ஹீரோ எந்த அளவிற்கு செல்லமாக கூப்பிடுவார் என்பதை நாம் சொல்ல தேவையில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img