சினிமா என்றாலே ஆச்சரியம்தான். அதிலும் சினிமா பிரபலங்களின் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் ஆச்சரியமாகத்தான் பார்க்கப்படுகிறது. சில விஷயங்கள் திடீரென காலம் கடந்து பேசப்படும்போது அட அப்படியா என்கிற வியப்பை நம்மால் அடக்க முடியாது. அப்படி ஒரு விஷயம் தான் இது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லதாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் அவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆண் குழந்தைகள் இல்லாத குறையை வெளிக்காட்டாமல் தன் இரண்டு குழந்தைகளையும் ஆண்களுக்கு நிகராகவே வளர்த்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்த நிலையில் அவர் ஒரு ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்க விரும்பினார். அதுவும் ஒரு நடிகையின் குழந்தை தத்து எடுத்து வளர்க்க விரும்புகிறார் என்கிற தகவல் சமீபத்தில் வெளியாகி உள்ளது. சின்னத்திரை சீரியல்களில் வில்லி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் கொடி கட்டி பறப்பவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ். நிறைய படங்களிலும் கூட இவர் நடித்துள்ளார்.
இவர் கமல்ஹாசன் சினிமாவிற்கு வந்த காலகட்டத்திலேயே சினிமாவிற்குள் நுழைந்தவர். சில படங்களில் நடித்து வந்த சமயத்தில் அப்போது தன்னைவிட 25 வயது மூத்த ஒரு ஒளிப்பதிவாளரான வில்லியம்ஸ் செய்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இவருக்கு மொத்தம் நான்கு குழந்தைகள் பிறந்தனர். அதில் கடைசி குழந்தை ஆண் குழந்தை.
இவரது கணவர் வில்லியம்ஸும் ரஜினிகாந்த்தும் வாய்ப்பு தேடும் காலங்களில் இருந்து ஒன்றாக தங்கி ஒரே சிகரெட்டை குடிக்கும் அளவுக்கு நண்பர்கள். பின்னர் இப்படி நான்கு குழந்தைகளை வைத்துக்கொண்டு போதிய வருமானம் இன்றி வில்லியம்ஸ் குடும்பம் நடத்துவதற்கு சிரமப்படுவதை பார்த்த ரஜினிகாந்த் ஒரு நாள் அவருடைய கடைசி பையனை எனக்கு தத்து கொடுத்து விடு.. நான் வளர்க்கிறேன் என்று கேட்டுள்ளார்.
வில்லியம்ஸ் தனது மனைவி மீது தனது குழந்தைகள் மீது பெரிதாக பாசம் இல்லாதவர் தான் என்றாலும் தனது கடைசி பையன் மீது அதிக அளவு பாசத்துடன் இருந்ததால் தத்துக் கொடுக்க மறுத்துவிட்டாராம். இந்த தகவலை சமீபத்தில் சாந்தி வில்லியம்ஸ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.