ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான படம் ஆர் ஆர் ஆர். வழக்கம்போல ராஜமவுலியின் பிரம்மாண்டம், ஆக்சன், பாடல்கள் எல்லாமே இந்த படத்திலும் பக்காவாக இடம் பெற்று இதை மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றின. இந்தியாவிலேயே இந்த படம் ஆயிரம் கோடியை தாண்டி வசூலித்தது. அது மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் இந்த படம் திரையிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மேலும் இதற்கு மகுடத்தில் வைரம் பதித்தது போல ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டு சிறந்த பாடலுக்கான விருதையும் பெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விழா நிகழ்ச்சிகள் நடக்கும்போது ஆர் ஆர் ஆர் படத்தை திரையிட்டு காட்டும் அளவிற்கு இந்த படம் வெளிநாட்டவர்கள். மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நம்ம ஊரில் எப்படி சீசன் பார்த்து ரஜினி, விஜய், அஜித் படங்களை ரிலீஸ் செய்கிறார்களோ அதே போல இந்த ஆஸ்கர் சமயத்தில் ஜப்பானில் இந்த ஆர் ஆர் ஆர் படத்தை ரீ ரிலீஸ் சமீபத்தில் செய்தார்கள்.
இதற்கான அறிவிப்பு வெளியாகி டிக்கெட் புக்கிங் திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. ஒரு தமிழ் படத்திற்கு அதுவும் படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் இப்படி ரீ ரிலீஸில் டிக்கெட்டுகள் உடனடியாக வெற்றி பெறுவது என்பது வேறு எந்த படங்களுக்காக நடந்திருக்குமா என தெரியவில்லை.