விஸ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, ஹரிகா பெட்டா, மொஹமத் சமத், தயானந்த் ரெட்டி மற்றும் பலர்.நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காமி’
தெலுங்கு படம் என்றால் டான்ஸ் பாட்டு அடி குத்து வெட்டு ரத்தம் குண்டு துப்பாக்கி சத்தம் இப்படி நமக்கு ஞாபகம் வரும் ஆனால் அதையும் தாண்டி சிறந்த கதை அம்சம் நிறைந்த கதைகள் அவ்வப்போது வருவதுண்டு அந்த வரிசையில் வந்திருக்கின்ற படம் காமு கதைக்களம் வினோத நோயால் பார்க்க பாதிக்கப்பட்ட அகோரி ( ஹாபிடோபியா எனும் மனித தொடுகை ஒவ்வாமை எனும் பாதிப்பு ) )இமயமலை பகுதியில் அடர்ந்த பனி பிரதேசத்தில் துரோனகிரி எனும் மலைப்பகுதியில் 36 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரிதாக பூக்கும் ஒளிரும் காளானை (மாலி பத்ரா) எடுக்க இளம் பெண்ணுடன் பயணிக்க
அதை சமயம் தேவதாசியின் மகளை அந்த ஊரின் தேவதாசியாக ஊர் பெரியவர்கள் முடிவு செய்ய அவளுக்கும் ஒரு வினோத குறைபாடு இருக்க (கான்ஜினிடல் அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா)
இந்தோ சீன எல்லை பகுதியில் சட்ட விரோதமாக லோபோடோமி தொடர்பான ஆய்வினை ஒரு கும்பல் மேற்கொள்கிறது.அவளை பரிசோதனை கூடத்திற்கு அனுப்புகிறார்கள் அங்கு அவளுக்கு பலவிதமான பரிசோதனைகள் நடக்கின்றன
முடிவில் என்னானது அகோரிக்கு அந்த மருத்துவ காளான் கிடைத்ததா பரிசோதனை கூட்டத்தின் செயல்பாடுகள் என்னென்ன என்று முக்கோண கதையை கடைசி காட்சியில் ஒரு முனையில் நினைக்கிறார் இயக்குனர்
ஆறாண்டுகளாக இந்த திரைப்படத்தை இந்த குழுவினர் உருவாக்கி இருக்கிறார்கள். அதனால் காட்சி படமாக்கத்தில் நேர்த்தி தெரிகிறது.
.
முதலில் பாராட்டு வேண்டியது நமது கேமரா மேன் பணிப்படந்த இமயமலையை இவ்வளவு அழகாக காட்சிப்படுத்தி அந்த பணியின் குளுமையை நம் கண்களுக்கு வரச் செய்து விட்டார் கேமரா மேன்படத்தொகுப்பு தான் இந்தப் படத்தின் பலம் மற்றும் பலவீனம். ஒளிப்பதிவு பின்னணி இசை ஆகியவை சர்வதேச தரத்தில் இருக்கிறது. இயக்குநர் வழக்கமான பாணியிலிருந்து வித்தியாசமான கதை சொல்லல் மூலம் ஒரு திரை அனுபவத்தை வழங்க வேண்டும் என விரும்பி இருக்கிறார். அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார்
நடிகர் விஸ்வக் சென் தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி திறமையை நிரூபித்திருக்கிறார். CT -333 எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் மொஹமத் சமத் நன்றாக நடித்து ரசிகர்களின் மனதில் பதிக்கிறார்.
காமி என்றால் தேடல் என பொருள்