spot_img
HomeNewsஅமீகோ கேரேஜ் விமர்சனம்

அமீகோ கேரேஜ் விமர்சனம்

மாஸ்டர் மகேந்திரன் ஜி எம் சுந்தர் ஆதிரா மற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் அமேகா கேரேஜ் கதைக்களம் கூடா நட்பு குல நாசம் என்ற வார்த்தைக்கு ஏற்ப கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பள்ளியில் பயிலும் மாஸ்டர் மகேந்திரன் தன் வகுப்பாசிரியர் அடித்துவிட அவரை பழி வாங்க கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்கும்  கேரேஜ் முதலாளி சுந்தரிடம் உதவி கேட்க அந்த நட்பு வளர்ந்து ஆலமரமாக மாஸ்டர் மகேந்திரன் காலேஜ் முடிந்து வேலைக்கு செல்ல ஒயின்ஷாப்பில் ஒருவன் தன் வண்டியை உதைக்க அந்த ஆத்திரத்தில் அவன் கன்னத்தில் மகேந்திரன் குத்து விட குத்து வாங்கிய நபர் மகேந்திரனை பழிவாங்க துடிக்க சுந்தர் மகேந்திரன் காப்பாற்ற இதே போல் பல சமயம் நடக்க ஊரில் பெரிய தாதாவிடம் அடியாளாக  கையாளாக இருக்கும் அந்த ஒருவன் மகேந்திரனை பழிவாங்க தன் தாதா மூலம் முயற்சிக்க தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மகேந்திரன் அந்த தாதாவை கொலை செய்து மிகப்பெரிய ரவுடியாக மாறுகிறான் பிறகு நடப்பது என்ன இதுவே அமேகா கேரேஜ் இன்  கதைக்களம

 

மாஸ்டர் மகேந்திரன் பிளஸ் டூ மாணவனாக காலேஜ் மாணவனாக வேலைக்கு செல்லும் மகனாக என மூன்று விதமான காலகட்டம் ஆனால் எந்த ஒரு மாற்றம் தெரியவில்லை மகேந்திரன் இடம்

மாஸ்டர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக இருந்த போது அவரை நான் ரசித்த நாம் அதே பாணியில் கதாநாயகனாக ஆன பின்பும் பின்பற்றுவது அவரின் வளர்ச்சிக்கு தடையாக அமையும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை

 

அவர் ரவுடியாக மாறுவதற்கான காரண காரியங்கள் அழுத்தமாக சொல்லப்படவில்லை ரவுடியான மகேந்திரனிடம் உடன் வேலை செய்யும் நபரை ஹோட்டலில் வெட்டும்போது ஏன் மகேந்திரனை வெட்டவில்லை என்பது நமக்கு புரியவில்லை

 

படத்திற்கு நாயகி  தேவை என்பதால் ஆதிரா அவ்வப்போது சில காட்சிகளில் சில சில வசனங்கள் பேசுகிறார் அவருக்கு ஒரு சின்ன கிளைக் கதை விதவை என்பது

 

ஜி எம் சுந்தர் அவர் கார் மெக்கானிக் கா கஞ்சா வியாபாரி யா இல்லை கார் மெக்கானிக்கல் குல் ஒரு கஞ்சா வியாபாரி யா என்பது  புரியாத புதிர் அவர் கதாபாத்திரத்தின் தன்மை என்ன என்பதை அழுத்தமாக சொல்லவில்லை

படிக்கும் காலத்தில் பிள்ளைகளை கவனமாக நாம் வளர்க்க வேண்டும் இல்லையென்றால் அவர்கள் பாதை வேறு வழியாக போய்விடும் என்ற கருத்தை சொல்ல இயக்குனர் இந்த படத்தை எடுத்திருக்கிறார் என்பது நமக்குத் தெரிகிறது

ஆனால் அவர் சொல்லிய விதம் மிக சாதாரணமாக இருக்கிறது இயக்குனருக்கு இது முதல் படம் என்பதால் அவரை நாம் குறை சொல்ல முடியாது வரும் காலங்களில் தன் தவறை சரி செய்து மிகச் சிறந்த இயக்குனராக வர நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img