சினிமாவில் பிரபலமாகி விட்டவர்களுக்கு பொதுவெளியில் செல்வது, ரசிகர்களை சந்திப்பது தான் பிரச்சனை என்றால் அதை தாண்டி இன்னொரு பிரச்சனை இருக்கிறது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. ஆம்.. பிரபலங்கள் என்பதாகவே அவர்களை சந்திப்பதற்காக, பேசுவதற்காக அல்லது கதை சொல்வதற்காக என பலரும் அவர்களது வீடுகளை தேடிச் சென்று அவர்களது நேரத்தை விரயமாக்குகிறார்கள்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு அது பொன்னான சந்திப்பு என்றாலும் பிரபலங்களுக்கு தங்கள் நேரம் தான் வேஸ்ட் ஆகிறது என்கிற எண்ணம் இருக்கவே செய்கிறது. ஒரு படம் ஒப்பந்தமாகியோ அல்லது வேறு ஏதோ ஒரு நல்ல விஷயம் கமிட் ஆனாலும் அந்த சந்திப்பு பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால் கதை சொல்கிறேன் என்று தேவையில்லாமல் வந்து தனது நேரத்தை வீணடித்து அதன் பின் அந்த படத்திலும் தான் நடிக்காவிட்டால் அந்த நேரம் வீண் தானே என்கிற எண்ணம் யாருக்கு வந்ததோ இல்லையோ இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்புக்கு இப்படி ஒரு எண்ணம் வந்துள்ளது. இதனால் இவர் தற்போது அதிரடியாக ஒரு முடிவு எடுத்து அறிவித்துள்ளார்.
அதாவது என்னுடைய பொன்னான நேரம் பலரால் வீணடிக்கப்படுகிறது. அதனால் என்னை சந்திப்பதற்கு, கதை சொல்வதற்கு யாரேனும் விரும்பினால் பத்து நிமிடம் சந்திப்புக்கு 1 லட்சமும் 20 நிமிடம் சந்திப்புக்கு இரண்டு லட்சமும் ஒரு மணி நேர சந்திப்புக்கு 5 லட்சமும் முன்பணமாக செலுத்தி பதிவு செய்து கொண்டு அதன் பிறகு தன்னை வந்து சந்திக்கலாம் என ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் தேவையில்லாமல் கதை சொல்கிறேன் என்றோ வேறு ஏதாவது பேசுகிறேன் என்றோ வருபவர்களை அழகாக தவிர்க்கும் முறையை கையில் எடுத்துள்ளார் அனுராக் காஷ்யப்.