இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படங்களில் கதை வசன உதவியாக கதாசிரியர் என்கிற பெயரில் அட்டை போலவே ஒட்டிக்கொண்டு வலம் வருபவர் ரத்தினகுமார். இவர் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இரண்டு படங்களும் பெரிய அளவில் போகாததால் லோகேஷ் கனகராஜின் படங்களில் தனது பங்களிப்பை தந்து வந்தார்.
லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசும்போது விஜய்க்கு ஆதரவாக பேசுவதாக நினைத்துக் கொண்டு தேவையில்லாமல் ரஜினி சொன்ன காக்கா கழுகு கதை குறித்து கிண்டல் அடித்ததால் தற்போது லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்க உள்ள படத்தின் டீமில் இருந்து இவர் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக ஏற்கனவே ராகவா லாரன்ஸை வைத்து இவர் ஒரு படம் ஆரம்பிப்பதாக இருந்து அது அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்த நிலையில் மீண்டும் ராகவா லாரன்ஸ் அதில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் வேலைகளை துவங்கி விட்டாராம் இயக்குனர் ரத்னகுமார்.