spot_img
HomeCinema Reviewஇடி மின்னல் காதல் ; விமர்சனம்

இடி மின்னல் காதல் ; விமர்சனம்

 

ஓப்பனிங் காதலுக்குள் கிரைம் கலந்து அதற்குள் ஒரு ஈரத்தை வைத்து ஒரு சிறுவனின் மன உளைச்சலை நமக்கு உணர்த்தி அதற்கான காரணத்தை நமக்கு குழப்பத்துடன் தெளிவுபடுத்தி இடியும் இல்லாமல் மழை இம் இல்லாமல் காதலை கானல் நீராக்கி வெறும் காற்று அடித்த பலூன் ஆக வெளிவந்திருக்கும் படம்.

இளம் உளவியல் சிகிச்சை மருத்துவராகப் பணியாற்றும் நாயகனுக்கும், தொழிலதிபர் ஒருவரின் மகளான நாயகிக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. இவர்கள் காதலிக்கும் போது… ஒரு இரவு நேரத்தில்… மழை பெய்யும் தருணத்தில்… சென்னை மாநகரின் போக்குவரத்து குறைந்த பகுதியில்.. எதிர்பாராத விதமாக இவர்கள் பயணிக்கும் வாகனம் விபத்தை ஏற்படுத்துகிறது. இதனால் முகம் தெரியாத ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து போகிறார்.

உளவியல் மருத்துவரான நாயகன் இந்த விபத்தை ஏற்படுத்தியதால்.. குற்ற உணர்ச்சியால் தவித்து காவல் துறையிடம் சரணடைய விரும்புகிறார். ஆனால் பல எதிர்ப்புகளை எதிர்கொண்டு காதலில் வெற்றி பெறுவதற்காக இன்னும் சில தினங்களில் இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு செல்லும் நாயகனுக்கு.. இதன் காரணமாக எந்த தடையும் ஏற்படக் கூடாது என நாயகி தவிக்கிறார்.

இதனால் காதலி சொல்லும் நிபந்தனையை நாயகன் ஏற்கிறார். இதனிடையே விபத்தில் இறந்தவருக்கு வளரிளம் பருவத்தில் மகன் ஒருவன் இருக்கிறார். அவன் தன்னுடைய தந்தையின் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கிறான். விபத்தில் தனது தந்தை மரணம் அடைந்ததை தாமதமாக தெரிந்து கொள்ளும் அவன் உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறான்.‌ உளவியல் சிக்கலுக்கு ஆளான வளரிளம் பையனும்.. உளவியல் சிக்கலுக்கு சிகிச்சை அளிக்கும் இளம் மருத்துவரான நாயகனும் எந்த புள்ளியில் சந்திக்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் இப்படத்தின் கதை.

கதை புதிய கோணத்தில் இருந்தாலும் அதனை சுவாரசியமான திருப்பங்களுடன் சொல்லி இருந்தால் இத்திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றிருக்க கூடும். முதல் பாதி திரைக்கதை இலக்கில்லாமல் பயணிப்பதால்.. தடுமாறுகிறது. ரசிகர்களுக்கும் அயர்ச்சியை உண்டாக்குகிறது.

சிவப்பு விளக்கு பகுதியைச் சேர்ந்த பெண் பாலியல் தொழிலாளி (யாஸ்மின் பொன்னப்பா) கதாபாத்திரம் கதையின் அச்சாணி என்றாலும், அதை யதார்த்தமாக விவரிக்கிறேன் என்ற பெயரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் ஏற்கனவே அறிமுகமானதாக இருப்பதாலும், அழுத்தமான வசனங்களோ.. காட்சி அமைப்புகளோ.. இல்லாததாலும்.. கதையோட்டம் தள்ளாடுகிறது.

நாயகன் சிபி சந்திரன் கதையின் நாயகனாக இல்லாமல்.. கதையின் ஒரு அங்கமாக.. கதாபாத்திரமாக நடித்திருப்பதால்.. இயக்குநர் எதிர்பார்த்த அளவான நடிப்பை மட்டுமே வழங்கி, ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முயற்சிக்கிறார். அவரின் முயற்சிக்கு ரசிகர்களிடம் ஆதரவு இல்லை. இவரது காதலியாக நடித்திருக்கும் பவ்யா தரிக்கா அழகான இளமையாலும், அற்புதமான நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் எளிதாக இடம் பிடிக்கிறார்.‌ கதையின் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் ஜெய் ஆதித்யா முகத்தில் வட இந்திய களை இருந்தாலும்.. நடிப்பா… கிலோ என்ன விலை? என கேட்டு ரசிகர்களை பயமுறுத்துகிறார்.

வட இந்தியாவிலிருந்து தமிழகம் வந்து தங்களது வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வட இந்தியர்கள், தமிழக கலாச்சாரத்தை மீறி மது, மாது என போகத்தில் திளைக்கிறார்கள் என்றும், உயிர் கொல்லி நோய்களுக்கு ஆளான பிறகு தற்கொலைக்கு முயல்கிறார்கள் என்றும் காட்சிப்படுத்தி இருப்பது..‌ வட இந்திய பகுதிகளிலிருந்து தென்னிந்திய பகுதிக்கு அதிக அளவில் இடம்பெயரும் வட இந்தியர்களை பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்கும் முயற்சியோ..! என எண்ணத் தோன்றுகிறது.

பாடல்களை விட பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது. படத்தொகுப்பு நான் லீனியர் பாணியில் அமைந்திருந்தால்.. திரைக்கதை சுவாரசியமாக இருந்திருக்குமோ..! என்றும் எண்ண வைக்கிறது.‌ ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் அம்சமான நகைச்சுவை காட்சிகளும் இல்லாததால்.. பெரும் சோகத்தை தருகிறது. வில்லன் என்று திரையில் தோன்றும் நடிகர் வின்சென்ட் நகுலின் நடிப்பு பிரமாதமாக இருந்தாலும்.. அவரது கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்படாததால் சோர்வைத் தருகிறது.

வில்லனின் குணாதிசயம் என்ன ? அவன் சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்பவனா ? இல்லை பெண் காமுகனா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அவனுடன் வரும் பாதிரியார் உடை அணிந்த நபர் எதற்காக  அந்த உடையை அணிந்திருக்கிறார். சண்டை போடும்போது எதற்காக சிலுவை மாலையை கழட்டி வைக்கிறார் என்பதை இயக்குனர் தெளிவுபடுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img