ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த். திரையுலகில் கிட்டத்தட்ட 20 வருடங்களை கடந்துவிட்ட இவர் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அதன் பிறகு திரிஷா, சுருதிஹாசன் உள்ளிட்ட சில நடிகைகளுடன் இணைந்து காதல் கிசுகிசுக்களில் சிக்கினார். அதன் பிறகு அதிலிருந்து மீண்டு சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தி நடிக்க தொடங்கினார்.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே மணிரத்தினத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை அதிதி ராவ் ஹைதரியை தீவிரமாக காதலித்து வந்தார் சித்தார்த். இவர்கள் இருவரும் இந்த காதலை ஒளித்தும் மறைத்தும் வைத்து வந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் தங்களது திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் திருமணம் என்றும் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தனர். இந்த நிலையில் சித்தார்த்தை திருமணம் செய்து கொள்வதற்கு அதிதி மூன்று கண்டிஷன்கள் போட்டதாகவும் அதற்கு சித்தார்த் ஒப்புகொண்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது திருமணத்திற்கு பிறகு நான் விருப்பப்பட்டால் நடிப்பேன், எப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்வேன், அதேபோல படப்பிடிப்பிற்கு எந்த நாட்டிற்கு செல்ல வேண்டுமானாலும் நான் கிளம்பி செல்வேன் இதற்கு எந்த தடையும் நீங்கள் விதிக்கக்கூடாது என சித்தார்த்திடம் கேட்க, காதல் மோகத்தில் எல்லாவற்றிற்குமே டபுள் ஓகே சொல்லிவிட்டாராம் சித்தார்த்.