தமிழ் திரையுலகில் கொஞ்சம் புத்திசாலித்தனம் கலந்த அதே சமயம் ரசிகர்களை ரசிக்க வைக்கின்ற விதமான படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் மகிழ் திருமேனி. இவர் இயக்கிய தடம், தடையறத் தாக்க, கலகத் தலைவன் ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்த படங்கள். அதனாலேயே இவருக்கு அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தை இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த அந்த வாய்ப்பு தான் இவருக்கு கிடைத்தது. ஆனாலும் படம் ஆரம்பிக்கவும் தாமதமானது. அதன் பிறகு படப்பிடிப்பும் தள்ளித்தள்ளித்தான் நடைபெற்று இன்னும் படப்பிடிப்பு முடியாத நிலையில் இருக்கிறது.
இதற்கு அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்த படம் ஜூன் மாதம் துவங்க இருக்கிறதாம். அதனால் விடாமுயற்சி படப்பிடிப்பை மே மாதத்திற்குள் முடித்து விடும்படி இயக்குனர் மகிழ் திருமேனிக்கு அஜித் டெட் லைன் கொடுத்து விட்டாராம். இதனால் படப்பிடிப்பை துரிதப்படுத்தி உள்ளாராம் மகிழ் திருமேனி.