சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்ததாக ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலகினரே ஆராதிக்கும் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் நடிகர் விஜய். அதனால் இவரது படத்தில் இவருடன் இணைந்து ஒரு காட்சியிலாவது நடித்து விட மாட்டோமா என பலரும் நினைப்பதுண்டு. அப்படி நடித்தவர்கள் எல்லோருமே தாங்கள் பெரும் பாக்கியம் அடைந்தது போலத்தான் பேசி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளாவிலும் விஜய்க்கு சாதாரண ரசிகர்கள் முதல் திரையுலக பிரபலங்களான ரசிகர்கள் வரை நிறைய பேர் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல மலையாள நடிகரும் இளம் இயக்குனருமான வினித் சீனிவாசன் என்பவருக்கு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்தது.
ஆனால் தற்போது இவர் மோகன்லாலின் மகனை வைத்து வருஷங்களுக்கு சேஷம் என்கிற ஒரு படத்தை இயக்கி வந்தார். இந்த படம் இன்னும் சில நாட்களில் ரிலீஸ் ஆகப்போகிறது. இந்தப் படத்தை இயக்கி வந்த சமயத்தில் தான் விஜய் பட வாய்ப்பு தேடி வந்தது. அதனால் வேறு வழியின்றி கோட் படத்தில் நடிக்க முடியாது என வருத்தத்தோடு அந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம் வினித் சீனிவாசன்.