சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படம் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் தயாரிப்பில் இருந்தது என்று ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதற்கு சற்றும் குறையாதபடி இங்கே தமிழில் ஷங்கர், கமல் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக நடைபெற்று வருகிறது.
இப்போதுதான் ஒரு வழியாக படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது தற்போது வரும் ஜூன் மாதம் இந்த படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இதனால் இந்தியன் பட ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதே சமயம் இயக்குனர் ஷங்கர் மட்டும் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
காரணம் இந்தியன் படமே லஞ்ச ஊழலுக்கு எதிராக உருவான படம். அதனாலேயே பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்தியன்-2 படம் துவங்கப்பட்ட சமயத்தில் தான் கமல் தனது அரசியல் கட்சியை துவங்கினார். ஊழல் லஞ்சத்தை அகற்றுவேன் என குரல் கொடுத்தார்.
ஆனால் இத்தனை வருடங்களில் இந்த படம் இப்போது முடிவதையும் சமயத்தில் அவர் லஞ்ச ஊழலில் திளைக்கும் திமுக கட்சியுடன் கூட்டணி அமைத்து அந்த கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இன்னும் சில நாட்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. வரும் ஜூன் நான்காம் தேதி ரிசல்ட் தெரிந்துவிடும்.
ஆனாலும் இந்தியன் 2 படமும் இதேபோல லஞ்ச ஊழலுக்கு எதிராகத்தான் உருவாகி இருக்கிறது. இப்படி கமல் பாதை மாதிரி பயணித்து தனது இமேஜை பொதுமக்களிடம் டேமேஜ் பண்ணிக் கொண்ட நிலையில் இந்தியன் 2 வெளியானால் அதற்கு எப்படி வரவேற்பு இருக்குமோ என்று சஞ்சலத்தில் இருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர்