தமிழ் சினிமாவில் இயக்குனர் பாக்கியராஜின் சிஷ்யர்களின் ஒருவராக உதவி இயக்குனராக பணியாற்றி, தான் இயக்கிய முதல் படமான புதிய பாதை படத்திலேயே இயக்குனர், ஹீரோ என இரட்டைக் குதிரை சவாரியை வெற்றிகரமாக துவங்கியவர் நடிகர் பார்த்திபன்.
அவரது குருநாதரான பாக்யராஜ் கூட சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட ரிட்டையர்டு ஆகிவிட்டார். ஆனால் பார்த்திபன் சினிமாவில் நடிப்பிலும் டைரக்ஷனும் புதுமையை புகுத்தி வருவதால் இப்போது வரை தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு ஒரு நடிகராகவும் ஒரு இயக்குனராகவும் வெற்றிகரமாக வலம் வருகிறார்.
இந்த நிலையில் தற்போது ஜீன்ஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளார் பார்த்திபன். இதில் நடித்துள்ள 13 பேரும் அறிமுகங்களே. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் பாக்யராஜ், “பார்த்திபன் புதிது புதிதாக யோசிக்கிறார். இளமையாக யோசிக்கிறார். இளமையாக காட்சியளிக்கிறார். இதற்கு காரணம் என்னவென்றால் அவரிடம் பெண் உதவி இயக்குனர்கள் நிறைய வேலை பார்க்கிறார்கள் என்று தான் நினைக்கிறேன். அதனால்தான் அவரால் உற்சாகமாக இளமையாக சிந்திக்கவும் இருக்கவும் முடிகிறது” என்று கூறினார். பாக்யராஜ் அப்படி கூறியபோது பார்த்திபன் வெட்கப்பட்டதையும் பார்க்க முடிந்தது.