நகைச்சுவை நடிகராக சந்தானத்துடன் போட்டி போட்டு வளர்ந்து வந்தவர் நடிகர் சூரி. ஒரு கட்டத்தில் சந்தானம் ஹீரோவாகி விட, சூரி மட்டும் காமெடி நடிகராக நடித்து வந்தார். இந்த நிலையில் தான் இயக்குனர் வெற்றிமாறன் தான் இயக்கிய விடுதலை படத்திற்கு சூரியை கதாநாயகன் ஆக்கினார். இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
சூரியன் நடிப்புக்கு மிகப்பெரிய பாராட்டுக்களும் கிடைத்தது. இத்தனைக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.
சமீபத்தில் வெளிநாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்ட போது மிகப்பெரிய கைதட்டலையும் பாராட்டுக்களையும் பெற்றது. சூரி, விஜய் சேதுபதி மட்டுமல்ல இந்த படத்தில் நடித்த கௌதம் மேனன், சேத்தன், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலருக்கும் அவர்களின் நடிப்புக்காக பாராட்டுக்கள் கிடைத்தன.
குறிப்பாக ஒரு அராஜகமான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த சேத்தன் இதுவரை அவர் நடித்த படங்களில் எல்லாம் கிடைத்ததை விட இந்த படத்தில் அதிக பாராட்டுகளை பெற்றார். அதே சமயம் படம் பார்க்கும்போது அந்த அளவுக்கு எரிச்சலையும் ஊட்டினார். இந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் இன்னும் இதற்கு மேல் அவர் நடித்திருக்கிறார், ரசிகர்கள் படம் பார்த்த பிறகு அவர் நேரில் வந்தார் என்றால் அவரை பிரித்து விடுவார்கள், அந்த அளவிற்கு நடித்து இருக்கிறார்.. அதனால் தயவு செய்து அவரது வீட்டார் அந்த படம் வெளியாகும்போது ஒரு வாரத்திற்காவது அவரை வெளியே விடாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று சேத்தன் கதாபாத்திரம் குறித்து இப்போது மிகப்பெரிய பில்டப் கொடுத்து விட்டார் சூரி