பொதுவாகவே இப்போதைய காலகட்டத்தில் ரஜினி, விஜய், அஜித் என சீனியர் நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் டீசர், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகும்போது அவை ஒரே நாளில் எத்தனை மில்லியன் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்படுகின்றன என்பதை ஒரு சாதனையாகவே அவரவர் ரசிகர்கள் பார்க்க துவங்கி விட்டனர்.
அந்த வகையில் ரஜினிக்கும் விஜய்க்கும் அவர்களது படங்களின் ஏதாவது டீசர் ட்ரெய்லர் வெளியாகும்போது ஒரே நாளில் அதிகபட்சமாக 25 மில்லியன் வரை பார்த்து ரசிக்கப்படுவது ஒரு சாதனையாக இதுவரை இருந்து வருகிறது. அதே சமயம் தெலுங்கு திரை உலகை இளம் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 படத்தின் டீசர் நேற்று முன்தினம் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளன்று வெளியானது. இது வெளியான 48 மணி நேரத்திலேயே கிட்டத்தட்ட 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
அதாவது ஒரு நாளைக்கு 50 மில்லியன் பேர் இந்த டீசரை பார்த்துள்ளார்கள் பிரபாஸுக்கு கூட இப்படி ஒரு விஷயம் நடக்கவில்லை. இதை பார்க்கும்போதே இனி விஜய், அஜித், ரஜினி, பிரபாஸ் ஆகியோர் அல்லு அர்ஜுனின் இந்த சாதனையை முறியடிப்பார்களா என்பது பெரிய கேள்விக்குறியாக மாறி உள்ளது,