மலையாள திரை உலகில் இருந்து பிரித்திவிராஜ், மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மற்றும் நிவின்பாலி உள்ளிட்ட பலரும் தமிழ் திரையுலகில் தங்களது காலடியை எடுத்து வைத்து தங்களுக்கு என ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி உள்ளார்கள். அதே சமயம் பிரபல நடிகரான பகத் பாசில் தமிழ் தெலுங்கு படங்களின் நடிக்க தயங்கி கொண்டு மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
அதே சமயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் விக்ரம், தெலுங்கில் புஷ்பா என இரண்டு படங்களில் நடித்து இரண்டிலும் வில்லத்தனம், மாஸ் என ரசிகர்களை கவர்ந்தார். அது மட்டுமல்ல கடந்த வருடம் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் ரத்தினவேல் என்கிற கதாபாத்திரத்திலும் வில்லத்தனத்தை காட்டி மிரட்டி இருந்தார் பகத் பாசில்.
இந்த நிலையில் தான் எதிர்பாராத கூட்டணியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் வேட்டையன் படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் வில்லனும் இல்லை, அதிரடி கதாபாத்திரமும் இல்லை.
ரஜினியுடன் இணைந்து கவுண்டமணி, வடிவேலு பாணியில் காமெடியில் கலக்கியுள்ளாராம் பகத் பாசில். நிச்சயமாக படம் வெளியாகும்போது இவர்களது கூட்டணி காமெடி ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்று படக்குழுவினர் சிலர் தகவலை கசிய விட்டுள்ளனர்.