spot_img
HomeNewsஅடேய்.. அது என்னோட சிரிப்பு இல்லடா ; வெடித்த சசிகுமார்

அடேய்.. அது என்னோட சிரிப்பு இல்லடா ; வெடித்த சசிகுமார்

டிவி ஷோக்களில் அல்லது மேடை நிகழ்ச்சிகளில் பிரபல நடிகர்களை போல மிமிக்ரி செய்து பலரும் பாராட்டுக்களை பெறுவார்கள். இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குரலில் பேசுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். அதில் பெரும்பாலும் நடிகர் சசிகுமாரை மிமிக்ரி செய்பவர்கள் அனைவரும் அவர் நாடோடிகள் படத்தில் வித்தியாசமாக ஒரு சிரிப்பு சிரிப்பாரே, அதைத்தான் மிமிக்ரி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் அதே போன்று சிரித்து காட்டுங்கள் சார் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சசிகுமார், “அது நான் சிரித்த சிரிப்பே அல்ல. படத்திற்காக நான் சிரித்தது வேறு. பின்னர் டப்பிங் என்பது எனக்கு அது சரியாக வராததால் எனக்கு பதிலாக அந்த படத்தில் காமெடி நடிகராக நடித்த நமோ நாராயணன் என்பவரை சிரிக்க வைத்து என்னுடைய சிரிப்பாக அதில் இணைத்து விட்டார்கள். இப்போது வரை அது என்னுடைய சிரிப்பு தான் என்று ஊரே சிரிப்பாய் சிரிக்கிறது” என்று ஒரு புதிய உண்மையை போட்டு உடைத்தார் சசிகுமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img