spot_img
HomeNewsரெண்டு முத்தம் கொடுங்கன்னு லேடீஸ் கேட்க முடியுமா ? எஸ்.ஜே சூர்யாவுக்கு தயாரிப்பாளர் கேள்வி

ரெண்டு முத்தம் கொடுங்கன்னு லேடீஸ் கேட்க முடியுமா ? எஸ்.ஜே சூர்யாவுக்கு தயாரிப்பாளர் கேள்வி

 

ஒவ்வொரு இயக்குனரும் தங்களது படத்திற்கு பொருத்தமான டைட்டலாக ஒன்றை தேர்வு செய்து வைத்திருப்பார்கள். கதையுடன் அவர்கள் பயணித்து வருவதால் அதுதான் பொருத்தமாக இருக்கும் என்றும் அவர்கள் நினைப்பார்கள். ஆனால் சில சூழ்நிலைகள் காரணமாக அந்த டைட்டில்கள் மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

இயக்குனர் எஸ்.ஜே சூர்யா வாலி படத்தை முடித்துவிட்டு விஜய்யை வைத்து குஷி என்கிற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படத்திற்கு அவர் முதலில் வைத்திருந்த டைட்டில் முத்தம் என்பதுதான். இந்த டைட்டிலை தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினசத்திடமும் அவர் கூறிய போது உடனே சிரித்து விட்டாராம் ஏ எம் ரத்தினம்.

காரணம் கூறும்போது இதே டைட்டிலை படம் வெளியாகும் போது பெண்கள் டிக்கெட் கவுண்டரில் சென்று டிக்கெட் எடுக்கும் போது இரண்டு முத்தம் கொடுங்க அப்படின்னு கேட்க முடியுமா ? அவங்களுக்கு சங்கடமா இருக்காதா ? அதனால் இந்த மாதிரி டைட்டில் நாம் வைக்கக் கூடாது என்று கூறி அதன் பின்னர் வைக்கப்பட்ட டைட்டில் தான் குஷி. இந்த தகவலை இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img