spot_img
HomeNewsதமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏப்ரல் 22 முதல்  சோனி எல்ஐவி சேனலில் மாஸ்டர்...

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏப்ரல் 22 முதல்  சோனி எல்ஐவி சேனலில் மாஸ்டர் செஃப் பிராந்திய நிகழ்ச்சிகள் ஆரம்பம்

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏப்ரல் 22 முதல் 
சோனி எல்ஐவி சேனலில் மாஸ்டர் செஃப் பிராந்திய நிகழ்ச்சிகள் ஆரம்பம்
உலகளவில் எண்ணற்ற ரசிகர்களை கொண்ட மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிராந்திய அளவிலான உணவுகளுக்கான சமையல் உலகை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் சோனி எல்ஐவி அலைவரிசை பெருமை கொள்கிறது.  மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சியின் வியக்க வைக்கும் மாபெரும் வெற்றியை அடித்தளமாக கொண்டு அவைகளின் பிராந்திய அளவிலான இந்நிகழ்ச்சிகள், இதற்கு முன்பு ஒருபோதும் கண்டிராத சுவையான சமையல் திறன் பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் என்பது நிச்சயம்.
மாஸ்டர் செஃப் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகியவை வெறுமனே சமையல் நிகழ்ச்சிகளல்ல. தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்களது மற்றும் இப்பிராந்தியங்களது உணவு முறைகளின் சிறப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சுவைகளையும், உணவு வகைகளையும் கொண்டாடி மகிழும் ஒரு நிகழ்வாகும்.  பிரபல சமையற்கலை நிபுணர்களான செஃப் கௌசிக் சங்கர், செஃப் ஸ்ரேயா அட்கா மற்றும் செஃப் ராகேஷ் ரகுநாதன் தமிழ் பதிப்பிலும் மற்றும் செஃப் சஞ்சய் தும்மா, செஃப் நிகிதா உமேஷ் மற்றும் செஃப் சலபதி ராவ் ஆகியோர் தெலுங்கு பதிப்பிலும் பங்கேற்று தங்கள் நிபுணத்துவத்தை சுவையோடும், நேர்த்தியோடும் காட்சிப்படுத்தவிருக்கின்றனர்.  எனவே, இந்தியாவின் கலாச்சார மரபுகளையும், பாரம்பரியங்களையும் வெளிப்படுத்தும் இந்நிகழ்ச்சியை கண்டு மகிழ தயாராகுங்கள்.  சமையலுக்குப் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும், செய்முறை குறிப்பிலும், ரெசிபிக்களிலும் பல தலைமுறைகள் வரலாறு பின்னிப் பிணைந்திருப்பதை இந்நிகழ்ச்சி அழகாக எடுத்துரைக்கும்.
உங்கள் நாட்காட்டியில் இப்போதே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.  சுவையான இப்பயணத்தை நாங்கள் தொடங்கும்போது எங்களோடு இணைந்து, எமது மகிழ்ச்சியில் பங்கு கொள்ளுங்கள்.  சோனி எல்ஐவி அலைவரிசையில் மட்டும் பிரத்யேகமாக ஏப்ரல் 22-ம் தேதி முதல் ஒளிபரப்ப ப்படவிருக்கும் மாஸ்டர் செஃப் தமிழ் மற்றும் தெலுங்கு நிகழ்ச்சிகளை தவறாமல் கண்டு ரசியுங்கள்.  தமிழ் மற்றும் தெலுங்கு உணவுகளின் அற்புதமான சுவையை ருசித்து மகிழுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img