சார்லி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க புது முகங்களுடன் படை இறங்கி இருக்கும் படம் பைண்டர்
வடசென்னை பக்கம் கேஸ் வாங்கி உள் செல்வது என்று ஒரு பழக்கம் உண்டு அதாவது மற்றவர்கள் செய்த குற்றத்தை பணத்திற்காக தான் செய்ததாக ஒத்துக் கொண்டு சிறைக்கு சென்று அதற்கான பணத்தை பெற்றுக் கொள்வது
மீனவ குப்பத்தில் மனைவி மகளோடு சந்தோஷமாக இருக்கும் சார்லி ஒரு தனியார் சீட்டு நிறுவனத்தை நம்பி மீனவ மக்களிடம் பணம் வசூலித்து தர பணம் வாங்கிய சீட்டு கம்பெனி ஏமாற்றி விட்டு செல்கிறது ஊர்மக்கள் சார்லி முற்றுகையிட ரூபாய் 12 லட்சம் எப்படியாவது நான் தந்து விடுவேன் என்று சொல்லி பொறுப்பேற்றுக்கொண்டு சார்லி பணத்திற்காக செய்யாத கொலை குற்றத்தை ஏற்று சிறைக்கு செல்ல
செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிப்பவர்களைக் கண்டறிந்து, அவர்களை நிரபராதிகள் என நிரூபிப்பதை முழுநேரப் பணியாக செய்கிற டிடெக்டிவ் வினோத் கவனத்துக்கு வருகிறது. அவர், நடந்தது என்ன? உண்மையில் கொலை செய்தவர் யார் என்பதை கண்டுபிடித்து நீதியை நிலைநாட்டுவது தான் பைண்டர் படத்தின் கதை
சிறந்த திரைக்கதை அமைத்து நமக்கு தந்திருக்கிறார் இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இவர்தான் படத்தில் நாயகன் அலட்டல் இல்லாத நடிப்பு ஆர்ப்பாட்டம் இல்லாத திரைக்கதையில் ஒரு பரபரப்பு என மிக அழகாக படத்தை எடுத்துச் சொல்கிறார்
அவருக்கு உதவியாளராக வரும் தாரணி இளமை ததும்பும் அழகோடு நாயகனுடன் பயணிப்பதும் துப்பறிவதும் மிகச் சிறப்பு கதையின்
முக்கிய கதாபாத்திரம் சார்லி இவரைப் பற்றி நாம் சொல்லி மக்களுக்கு தெரிய வேண்டியது இல்லை நகைச்சுவையில் மிகச் சிறப்பாக பங்காற்றிய இவர் இப்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்
மற்றும் நிழல்கள் ரவி சென்றாயன் பிரானா மற்றும் பலர் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருப்பது இயக்குனரின் உழைப்பு தெரிகிறது
. இயக்குனருக்கு பிறகு பாராட்டப்பட வேண்டியவர் எடிட்டர் காட்சி கோர்ப்பு படம் பார்க்கும் ரசிகன் குழப்பம் ஆகாமல் மிகத் தெளிவாக புரியும் வண்ணம் தொகுத்து வழங்கி இருக்கிறார் அவருக்கு நம் பாராட்டுக்கள்
இயக்குனர் எடுத்துக்கொண்ட கதைக்களமும் அதை திரைக்கதை மூலம் எதிர்பாராத பல திருப்பங்களை தந்து படம் பார்க்கும் ரசிகனை பரபரப்புடன் வைத்துக் கொள்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்
தமிழ் சினிமாவில் இவருக்கு நிச்சயம் ஒரு சிறந்த இடம் கிடைக்கும் என்பதில் நமக்கு ஐயமில்லை
பரபரப்பான கிரைம் திரில்லராக
பைண்டர்– படம் இல்லை— பாடம் —