தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தில் நடிக்கும் காலத்திலேயே உடந நடிக்கும் நடிகர் நடிகைகளுடன் காதல் வயப்பட்டு அந்த படம் முடிந்ததும் அடுத்தது உடனே திருமணம் செய்து கொள்வது உண்டு. இதற்கு உதாரணம் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் மற்றும் அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடித்த நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் செய்து கொண்டதை சொல்லலாம்.
அதேபோல நீண்ட நாட்களாக காதலித்து பின்னர் ஒரு கட்டத்தில் திருமண வாழ்க்கையில் இணைவார்கள்.. அதற்கு லேட்டஸ்ட் உதாரணமாக விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணத்தை சொல்லலாம். இவர்களுக்கெல்லாம் முன்பாக இருந்தே சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத சாந்தனு என்பவரை காதலித்து வந்தார் கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன்.
கிட்டத்தட்ட 10 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் மும்பையில் லிவிங் டுகதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். இருவரும் ஜோடியாக பொது நிகழ்ச்சிகளுக்கு வருவது ரொம்பவும் நெருக்கமாக வீடியோக்கள் எடுத்து அதை சோசியல் மீடியாவில் போடுவது என தீவிர காதலில் இருந்தார்கள்.
யார் கண் பட்டதோ என்னவோ தெரியவில்லை.. தற்போது இவர்கள் காதல் பிரேக்கப் ஆகிவிட்டது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் சுருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தனது காதலரின் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளது இதை உறுதிப்படுத்தி உள்ளது.