சில நடிகைகள் ஒரே படத்தில் ஓஹோ என பெயர் பெற்று விடுவார்கள். அதன் பிறகு மிகப்பெரிய அளவில் பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் சில முன்னணி ஹீரோக்களுடன் நடித்த அந்த கெத்திலேயே ஓவர் பில்டப் கொடுத்துக் கொண்டு சினிமாவை சுற்றி வருவார்கள். அப்படி ஒரு நடிகை தான் மாளவிகா மோகனன்.
மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் நடித்த இவருக்கு அடுத்து ஆறு வருடங்கள் நடிப்பதற்கு படமே இல்லை. சீண்டுவதற்கு ஆள் இல்லாமல் இருந்த இவரை தமிழுக்கு அழைத்து வந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடித்த பேட்ட படத்தில் நடிக்க வைத்தார் கார்த்திக் சுப்புராஜ். பூவுடன் சேர்ந்தால் நாரும் மனம் பெறும் என்பது போல ரஜினி படத்தில் நடித்ததால் ஒரே படத்தில் இங்கே பாப்புலர் ஆனார் மாளவிகா மோகன்.
அதன்பிறகு அதை வைத்து மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தனுஷுடன் நடித்தார். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமுடன் தங்கலான் என்கிற படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் கேள்விக்கு பதில் சொல்கிறேன் என உரையாடலை ஆரம்பித்தார் மாளவிகா மோகனன். அப்போது ரசிகை என்கிற பெயரில் ஒரு நெட்டிசன், “அக்கா எப்போது நடிப்பு கற்றுக் கொள்வதற்காக நடிப்பு வகுப்புக்கு போக போகிறீர்கள் ?” என்று நக்கலாக ஒரு கேள்வியை கேட்டார்.
ஒரு நடிகையை இப்படி நேருக்கு நேர் கேட்டால் கோபம் வருமா வராதா ? மாளவிகா மோகனனுக்கும் கோபம் வந்தது. அவர் உடனே நீ உன்னை ஒரு துறையில் நல்ல நிலையில் உருவாக்கிக்கொண்டு அப்புறம் வந்து என்னிடம் வந்த இதே கேள்வியை கேள் நான். அப்போது நடிப்பு பயிற்சி வகுப்புக்கு போகிறேன்” என்று ஆத்திரத்துடன் பதில் அளித்துள்ளார்.
கேள்வி கேட்டால் இப்படியா பதில் அளிப்பது என்று அவரை நெட்டிசன்கள் பலரும் கரித்துக் கொட்டி வருகின்றனர்.