இயக்குனர் வெங்கட் பிரபு ஜாலியான மனிதர்தான். மனதில் பட்டதை வெள்ளந்தியாக பேசிவிடுவார். தற்போது விஜய்யை வைத்து அவர் கோட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் எல்லா ஆக்சன் ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் ட்ரெய்லர்கள் எல்லாமே ஒரே மாதிரியான மாஸ் பஞ்ச் வசனங்கள் என்பது போல தான் வெளியாகி வருகின்றன என்று கூறியிருந்தார்.
அவர் பொதுவாக சொன்னாலும் இந்த சமயத்தில் அவர் ஏன் இதை கூறுகிறார் என ஆராய்ந்து பார்த்த ரசிகர்கள், சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் கூலி படத்திற்காக ஒரு அறிமுக டீசர் வெளியிடப்பட்டது, அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வசனங்களை பேசுகிறார். அதை குறிப்பிட்டு தான் வெங்கட் பிரபு இப்படி கிண்டல் அடித்துள்ளார் என்று நினைத்த ரஜினி ரசிகர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள்.
உடனே சுதாரித்த வெங்கட் பிரபு, இல்லையில்லை.. நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை.. பொதுவாக சொன்னேன்.. மாஸ் ஹீரோக்கள் என்றாலே நாங்கள் உட்பட எல்லோருமே அப்படித்தானே ட்ரெய்லர்கள் உருவாக்க வேண்டி இருக்கிறது.. நீங்கள் புதிதாக விரும்பினால் நாங்கள் நிச்சயம் வித்தியாசமாக தர காத்திருக்கிறோம்” என்று அப்படியே விளக்கம் சொல்லி எஸ்கேப் ஆனார்.