spot_img
HomeNewsஜெயராம் மகள் திருமணத்தில் நேரில் கலந்துகொண்ட ஒய்.ஜி மகேந்திரன்

ஜெயராம் மகள் திருமணத்தில் நேரில் கலந்துகொண்ட ஒய்.ஜி மகேந்திரன்

மலையாள திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயராம். மற்ற நடிகர்கள் எல்லாம் மலையாளத்திலிருந்து தமிழுக்கு இப்போதுதான் வரத்துவங்கி இருக்கும் நிலையில் மம்முட்டி மோகன்லாலுக்கு முன்பாகவே நேரடி தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களுடன் நெருக்கமானவர். இவரது மகன் காளிதாஸ் ஜெயராமும் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இவரது மகள் மாளவிகாவுக்கு சமீபத்தில் குருவாயூரில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு கொச்சியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஜெயராமுக்கு தமிழ் திரை உலகில் நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் ஜெயராம் மகள் திருமணத்திற்கு நேரில் சென்று கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img