தமிழக திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் கேப்டன் என்கிற நீங்காத புகழ் பெற்றவர் விஜயகாந்த். கடந்த டிசம்பர் மாதம் இவர் உடல் நலக்குறைவால் காலமானார். விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததும் திரையுலகை விட்டு ஒதுங்கியதும் பின்னர் அவர் ஊடகங்கள் மூலமாக நிறைய கேலிகளையும் கிண்டல்களையும் சந்திக்க ஆரம்பித்தார்.
அவரை தூண்டிவிட்டு பலரும் கேலிப் பொருளாக காட்ட முயற்சித்தனர். அதே சமயம் சினிமாவில் கூட சத்யராஜ் போன்ற ஒரு சிலர் மறைமுகமாக விஜயகாந்த்தை விமர்சித்து வைக்கப்பட்ட காட்சிகளை நடித்தனர்.
இந்த நிலையில் அமீர் நடிப்பில் இயக்குனர் ஆதம்பாவா இயக்கத்தில் உயிர் தமிழுக்கு என்கிற படம் வெளியாக இருக்கிறது. இது அரசியல் பின்னணியில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள அமீர் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறும்போது ஒரு காட்சியை குறிப்பிட்டு விளக்கி. இந்த காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஆனால் அதில் கேப்டன் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா குறித்து கிண்டலாக காட்சிகள் வைத்திருந்தது அவர் கூறியதன் மூலம் தெரிய வந்தது. இந்த படம் எடுக்கத் தொடங்கி சில வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் சமீபத்தில் விஜயகாந்த் மறைந்து விட்டதால் அவரை கிண்டல் பண்ணும் விதமாக காட்சிகளை வைத்தால் நன்றாக இருக்காது என்று நினைத்து இந்த காட்சிகளை தூக்கி விட்டார்கள் என்று தெரிகிறது.