போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கும் தந்தைக்கு மகனாக பிறக்கும் கவின் சிறு வயது முதல் நடிப்பின் மேல் கொண்ட காதலால் தான் மிகப்பெரிய நடிகனாவேன் என்ற ஆசையில் சினிமாவில் நடிக்க முயற்சிக்க வாய்ப்பு கிடைக்காமல் தன் நடிப்பை மேம்படுத்த மும்பைக்கு சென்று நடிப்பு பயிற்சி எடுத்து பின்னர் சென்னைக்கு வரும்போது கவினுக்கு மிகப்பெரிய திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்க படப்பிடிப்பிற்காக காரில் ஹைதராபாத் செல்லும் போது கார் விபத்துக்குள்ளாகி கவின் முகத்தில் காயங்களுடன் தப்பித்துக் கொள்ள கவின் நடிகன் கனவு என்னானது என்பதை கதை
வெற்றி நாயகனாக வளர்ந்து கொண்டிருக்கும் கவினுக்கு இந்த ஸ்டார் படம் ஓ ஸ்டார் அந்தஸ்தை கொடுக்கும் என்பது கவின் நடிப்பில் மக்களுக்கு அந்த அளவுக்கு ஈர்ப்பு இருக்குது என்பதில் தியேட்டர்ல இருந்து வெளிவரும் ரசிகரின் உற்சாகமே சாட்சி
தந்தையின் கனவை நனவாக்க ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆவலில் நவீனின் தேடல் கோடம்பாக்கத்தில் வாய்ப்பு தேடிக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு மனிதனின் தேடலை ஞாபகப்படுத்தி இருக்கிறது
அதே சமயம் டீன் ஏஜ் பருவத்தில் வரும் அந்த காதலை மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பதில் கவின் நம் காதல் இளவரசனை ஞாபகப்படுத்துகிறார்
முகத்தில் அடிபட்டு காதலை தொலைத்து விட்டு சிதைந்து போன கனவுகளோடு வாழ பிடிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் கவினின் நடிப்பாற்றல் படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகனின் மனதை கண்ணீர் வடிக்க செய்கிறது
படத்தில் இரு கதாநாயகிகள் ஒருவர் காதலி இன்னொருவர் மனைவி காதலியாக வருபவர் இளமை துள்ளல் என்றால்
மனைவியாக வருபவர் மிடில் கிளாஸ் இல்லத்தரசிகளின் முகக் கண்ணாடி இவர்கள் அனைவரையும்
நடிப்பில் தூக்கி சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் கவின் தந்தையாக வரும் லால் மகனின் கனவுகளை தனக்குள் சுமந்து கொண்டு மகனின் தந்தையாக மட்டும் இல்லாமல் தோழனாக மிகச் சிறப்பாக தன் பங்களிப்பை செய்து இருக்கிறா
இயக்குனர் படத்தை படமாக இருக்காமல் வாழ்க்கையின் எதார்த்தத்தை தெள்ளத் தெளிவாக தன் திரைக்கதையின் மூலம் சிறப்பாக வடிவமைத்திருக்கிறா
இசை இவரைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை சொன்னால் மிகை இல்லை அந்த அளவுக்கு வசனத்தின் உச்சரிப்பை தன் இசையின் மூலம் உயிர் கொடுத்து உலாவ விட்டிருக்கிறார்
ஸ்டார் எட்டா தூரத்தில் இருந்தாலும் நாம் நினைத்தால் தொட்டு விடலாம்