தமிழ் சினிமாவில் மிக குறைந்த வயதில் இசையமைப்பாளராக அறிமுகமானது ஜி வி பிரகாஷ் என்றால் அதில் மாற்று கருத்து இல்லை. அனிருத் கூட அதன் பிறகு வந்தவர் தான். அப்படி ஏ ஆர் ரகுமானின் சகோதரி மகனாக சினிமாவிற்குள் நுழைந்தாலும் கூட சிறுவயதிலேயே வெற்றிப் படங்களுக்கு இசையமைக்கும் அளவிற்கு தனது திறமையை வளர்த்துக் கொண்டவர் ஜிவி பிரகாஷ்.
அதன் பிறகு ஒரு கட்டத்தில் நடிப்பின் மீது ஆசை ஏற்படவே ஒரு நடிகராகவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். அதே சமயம் இசையையும் விட்டுக் கொடுக்காமல் முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜிவி பிரகாஷ். கிட்டத்தட்ட இவர்களது திருமணம் நடைபெற்று பத்து வருடங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றும் விரைவில் விவாகரத்து பெற போகிறார்கள் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இவர்களது பிரிவுக்கு இந்த இரு குடும்பத்திற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரச்சனைகள் தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு முன்பும் இசையமைப்பாளர் டி இமான், பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் ஆகியோரும் தங்களது காதல் மனைவிகளை இதேபோல விவாகரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது, அந்த பட்டியலில் தற்போது ஜிவி பிரகாஷும் இணைந்துள்ளார்.