தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கூட பெரும்பாலும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படங்கள் தான் வெளிவந்து கொண்டிருந்தன. அப்படி வந்த படங்களில் கூட ஜாதி சம்பந்தப்பட்ட படங்கள் வெளியாகின. ஆனாலும் அவை எதுவும் ஒரு ஜாதிக்கு எதிராக இன்னொரு ஜாதியை தூக்கி பிடித்து கலவரத்தை தூண்டவில்லை.
ஆனால் இயக்குனர்கள் பா ரஞ்சித், சமீப காலமாக வெற்றிமாறன் ஆகியோர் வந்த பிறகு தங்களது ஜாதியை பாதுகாப்பதாக அல்லது மேல் நிலைக்கு கொண்டு வருவதாக சொல்லிக் கொண்டு தங்களது படங்களில் கருத்து திணிப்பையும் மாற்று ஜாதிக்கு எதிரான வன்மத்தையும் கொட்டி வருகிறார்கள் என்று பல பேர் சொல்வதுண்டு..
இந்த நிலையில் இன்று கவுண்டம்பாளையம் என்கிற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரட்சகன் பட இயக்குனர் பிரவீன் காந்தி பேசும் போது. வளர்ச்சியில் சென்று கொண்டிருந்த தமிழ் சினிமா வெற்றிமாறன், பா ரஞ்சித் ஆகியோரின் வருகைக்குப் பிறகு தளர்ச்சி அடைந்து விட்டது. காரணம் அவர்கள் சாதிய வெறியோடு தான் படம் எடுக்கிறார்கள். ஒன்றாக ஒண்ணு மண்ணாக இருந்த நமக்குள் பிளவு ஏற்படுத்தும் விதமாகத்தான் அவர்களது படங்கள் இருக்கின்றன என்று காட்டமாக விமர்சித்தார்.