தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே ஒரு போக்கு நிலவி வருகிறது. அதாவது ஒரு காலகட்டத்தில் வில்லன்கள் அவர்களது அடியாட்கள் தான் தான் மோசமான கெட்ட வார்த்தைகளை பேசி வந்தார்கள். அவர்கள் பேசும் கெட்ட வார்த்தைகள் கூட ஓரளவுக்கு காது கொடுத்து கேட்கும் அளவிற்கு இருந்தது. ஆனால் சமீப காலமாக விஜய், விஷால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களே கேட்பதற்கே கூசக்கூடிய, பெண்கள் அருவருக்கக் கூடிய வார்த்தைகளை தங்களது படங்களில் சர்வ சாதாரணமாக பேசி வருகிறார்கள்.
கேட்டால் அந்த காட்சிக்கு பொருத்தமானது என்றும் இயக்குனர் கூறியதால் தட்ட முடியவில்லை என்றும் சால்ஜாப்பு சொல்லி வருகிறார்கள். சமீபத்தில் இயக்குனர் கௌதம் மேனன் கூட ரத்னம் படத்தில் அது போன்று ஒரு வார்த்தையை பேசியிருந்தார். ஆனால் இந்த வார்த்தைகள் எல்லாமே படம் குறித்து வெளியாகும் ட்ரெயிலர்கள், டீசர்களில் மட்டுமே இடம் பெறுகின்றன.
படம் சென்சார் செய்யப்படும்போது இவை அனைத்தும் நீக்கம் செய்யப்படுகின்றன. ஆனால் படத்தில் இவை இடம் பெறாது என்று தெரிந்தும் இந்த வார்த்தைகளை ட்ரெய்லரில், டீசரில் வைக்கிறார்கள் என்றால் அது பரபரப்புக்காகவும் விளம்பரத்திற்காகவும் தான். இந்த லிஸ்டில் தற்போது சந்தானமும் சேர்ந்து விட்டார்.
அவர் தற்போது நடித்துள்ள இங்கு நான் தான் இங்கு என்கிற படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கான பத்து நொடி ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில் சந்தானம் பேசியிருக்கும் கெட்ட வார்த்தை இதுவரையிலான நடிகர்கள் யாருமே பேசியிராத ஒன்று.
குழந்தைகளும் ரசிக்கக்கூடிய சந்தானம் இதை எப்படி பேசி இருக்கிறார் என்று ரசிகர்கள், குறிப்பாக பெண்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றன.ர் பரபரப்பிற்காகவும் விளம்பரத்திற்காகவும் சந்தானமும் இந்த கேடுகெட்ட விளம்பர யுக்தியை கையில் எடுத்து விட்டாரே.. இதற்கான பலன் நிச்சயமாக அவருக்கு கிடைக்கும்.