தமிழ் சினிமாவில் நிரந்தர நண்பரும் இல்லை.. நிரந்தர எதிரியும் இல்லை என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு சிலர் நீண்ட காலம் பகையுடன் இருந்தாலும் பொது இடங்களில் பார்க்கும்போது ஒருவருக்கொருவர் முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விடுவார்கள். இல்லை என்றால் ஒன்றாக சந்திப்பதை தவிர்த்து விடுவார்கள்.
அப்படி தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நீண்ட நாள் பகையுடன் இருந்து வருபவர்கள் யார் என்றால் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் உலகநாயகன் கமல்ஹாசனும் ஆளவந்தான் படத்தை தயாரித்த போது, அதன் பட்ஜெட்டை கமல் அதிகமாக இழுத்து விட்டது, தான் சொன்ன விஷயங்களை மீறி அந்த படத்தில் செயல்பட்டது, படம் வெளியான பிறகு மிகப்பெரிய நட்டமானது என அந்த படத்திற்கு பிறகு கமல் மீது பல குற்றச்சாட்டுகளை கூறிய தலைப்புலி தான் அதன் பிறகு இத்தனை வருடங்கள் அவரை சந்திக்கவே இல்லை.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ராமானுஜம் நூற்றாண்டு விழாவில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். அது மட்டுமல்ல கலைப்புலி தாணு கமலுக்கு நினைவு பரிசு வழங்கி சால்வையும் போர்த்தினார். கமலும் அதை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார். இந்த வழியாக நீண்ட கால பகை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
அதேபோல இன்னொரு பக்கம் நடிகர் விஜய்க்கும் இயக்குனர் விக்ரமனுக்கும் கூட பல வருடமாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வருகிறது. இத்தனைக்கும் பூவே உனக்காக என்கிற படத்தின் மூலம் விஜய்யின் திரையுலக பயணத்தின் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் தான் விக்ரமன்.
அதன்பிறகு உன்னை நினைத்து என்கிற படத்தில் விஜய்யை வைத்து இயக்கிய போது சில நாட்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விஜய் அந்த படத்தை விட்டு விலகினார், அதன் பிறகு சூர்யா அந்த படத்தில் நடித்தார். அதிலிருந்து இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா தற்போது ஹிட் லிஸ்ட் என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தை கே.எஸ் ரவிக்குமார் தயாரிக்கிறார். இதை தொடர்ந்து இவர்கள் அனைவரும் விஜய்யை நேரில் சந்தித்து உள்ளனர். அப்போது விக்ரமனை கட்டித்தழுவிய விஜய் அவரது மகன் விஜய் கனிஷ்காவை மனதார வாழ்த்தினார். அந்த வகையில் இந்த நீண்ட கால பாகையும் ஒரே நாளில் முடிவுக்கு வந்துள்ளது.