spot_img
HomeNewsநயன்தாராவின் நிறைவேறாத ஆசைக்கு உயிர் கொடுக்கும் இயக்குனர்

நயன்தாராவின் நிறைவேறாத ஆசைக்கு உயிர் கொடுக்கும் இயக்குனர்

 

நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பின்னரும் கூட திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஒரு பக்கம் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் இன்னொரு பக்கம் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் மாறி மாறி நடித்து வருகிறார்.
அதே சமயம் திரையுலகை பொருத்தவரை ரசிகர்கள் எதிர்பார்க்கும் காம்பினேஷனில் படங்கள் உருவாகாமல் ஏமாற்றத்தை தருவது வழக்கம். அந்த வகையில் எப்படி இத்தனை வருடங்களில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்த நயன்தாரா இன்னும் கமல்ஹாசனுடன் மட்டும் இணைந்து நடிக்கவில்லை என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாக இருந்து வருகிறது.
அதேபோலத்தான் அனைத்து நடிகைகளும் இயக்குனர் கௌதம் மேனனின் டைரக்சனின் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என நினைப்பார்கள். நயன்தாராவுக்கு கடந்த 20 வருடத்தில் அதுவும் கைகூடவில்லை. இந்த நிலையில் தான் கௌதம் மேனனின் டைரக்சனில் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. அனேகமாக இந்த படம் மலையாளத்தில் உருவாகலாம் என்றும் அப்படி உருவானால் கௌதம் மேனனின் முதல் மலையாள படமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img