spot_img
HomeNewsமஞ்சு வாரியரால் சிறை சென்ற இயக்குனரின் படம் வெளியாவதில் சிக்கல்

மஞ்சு வாரியரால் சிறை சென்ற இயக்குனரின் படம் வெளியாவதில் சிக்கல்

 

தனுஷ் நடித்த மாரி-2 படத்தில் வில்லனாக நடித்தவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். தற்போது மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இவர் வளர்ந்து விட்டார். இவர் நடிக்கும் படங்கள் அவ்வப்போது சீரான இடைவெளியில் வெளியாகி வந்தாலும் கூட, தான் நடித்துள்ள வழக்கு என்கிற படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்து வருகிறார் என படத்தின் இயக்குனர் சனல்குமார் சசிசதரன் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தனைக்கும் இந்த படத்தை படத்தின் இயக்குனருடன் சேர்ந்து நடிகர் டொவினோ தாமஸும் இணைந்து தான் தயாரித்துள்ளார். ஆனால் தியேட்டரில் படத்தை வெளியிட விடாமல் இவர் தடுக்கிறார் என்றும் ஒடிடி தளங்களோ படத்தை வாங்கவே மாட்டேன் என்கிறார்கள் என்றும் புலம்பியுள்ளார் இயக்குனர் சனல் குமார்.
ஆனால் இது குறித்து பதிலடி கொடுத்துள்ள டொவினோ தாமஸ் கூறும்போது, “இந்த படம் விருது விழாக்களுக்கு அனுப்புவதற்காகவே எடுக்கப்பட்ட படம். தியேட்டரில் வெளியிட்டால் நட்டம் வரும் என்பதால் வெளியிட வேண்டாம் என்று கூறினேன். அதே சமயம் ஓடிடி தளத்தில் இந்த படத்தை வாங்க மறுக்கிறார்கள் என்றால் அது இயக்குனருக்கு வெளியில் உள்ள கெட்ட பெயர் காரணமாகத்தான்” என்று கூறியுள்ளார்.
அது என்ன இயக்குனருக்கு வெளியில் உள்ள கெட்ட பெயர் என்கிறீர்களா ? இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நடிகை மஞ்சு வாரியார் நடிப்பில் மலையாளத்தில் காயாட்டம் என்கிற படத்தை இயக்கினார். அதன் பிறகு கடந்த 2022ல் நட்பின் அடிப்படையில் மஞ்சு வாரியரை போன் செய்து அழைத்து, மெசேஜ் செய்து தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனை தொடர்ந்து மஞ்சு வாரியருக்கு அவரது மேனேஜர்களால் ஆபத்து உள்ளது.. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சோசியல் மீடியாவில் புகார் தெரிவித்திருந்தார்.
ஆனால் தன் மீது வேண்டுமென்றே களங்கம் சுமத்தும் விதமாக நடந்து கொள்கிறார் என கூறி மஞ்சு வாரியர் இவர் மீது போலீஸ் புகார் கொடுக்க அதனால் கைது செய்யப்பட்டு சிறை சென்றார் சனல் குமார். இது திரையுலகில் அவர் மீது கெட்ட பெயரை ஏற்படுத்தியது. இதனாலையே தற்போது அவரது படத்தை ஓடிடி நிறுவனங்கள் வாங்க மறுக்கின்றன என டொவினோ தாமஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img