சமீபகாலமாக மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற இரண்டு மூன்று படங்களில் கதாநாயகிகளே இல்லை. பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் கதாநாயகர்கள் மட்டுமே அந்த படங்களில் இடம் பெற்றிருந்தார்கள். ஆனாலும் படம் பார்த்த ரசிகர்கள் கதாநாயகி வேண்டும், கிளுகிளுப்பு வேண்டும் என்றெல்லாம் நிலைக்காமல் அந்த படங்களை மிகப்பெரிய வெற்றி படமாக்கி கோடிகளில் வசூலை வாரிக் கொடுத்தார்கள்.
இப்படியே போனால் பலரும் கதாநாயகி கொடுக்கும் சம்பளத்தை மிச்சப்படுத்துவதற்காகவே கதை எழுத துவங்கி விடுவார்களோ என்று சில கதாநாயகிகள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் சசிகுமார் உடன் இணைந்து வெற்றிவேல், கிடாரி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மலையாள நடிகை நிகிலா விமல்.
அவரிடம் இப்படி கதாநாயகிகளே இல்லாமல் படம் எடுக்கிறார்கள் என்று நிருபர்கள் கேட்ட போது, “ஏன் எல்லா படத்திற்கும் கதாநாயகி அவசியமா என்ன ? கதை யாரை கேட்கிறதோ அந்த கதாபாத்திரங்கள் மட்டும் இருந்தால் போதும். வேண்டும் என்றே கதாநாயகியை உள்ளே கொண்டு வந்தால் அது படத்தின் கதையின் போக்கை மாற்றி விடும். வெற்றியை பாதித்துவிடும்” என்று கூறியுள்ளார்.