இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படங்களில் அவரது ஆஸ்தான கதாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக கூடவே இருந்து வருபவர் இயக்குனர் ரத்தினகுமார். இவர் மேயாத மான், ஆடை உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தாலும் லோகேஷ் படங்களில் பணியாற்றியதன் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார்.
இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் காக்கா, கழுகு கதை பற்றி பேசியது விஜய் பற்றி தான் குறிக்கிறது என்று நினைத்துக் கொண்ட இந்த ரத்தினகுமார் லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசும்போது ரஜினிக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு அதே காக்கா கழுகு விஷயம் பற்றி விமர்சித்து பேசினார்.
இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அடுத்ததாக ரஜினி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்று அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் ரத்தினகுமாரை தன்னுடைய டிஸ்கசன் டீமில் சேர்த்துக் கொள்ளவில்லை.
ரஜினியை பற்றி அவர் விமர்சித்து பேசியதால்தான் ரத்தினகுமாரை லோகேஷ் ஒதுக்கி விட்டார் என்று சொல்லப்பட்டது. இன்னும் அந்த படம் துவங்காத நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது நண்பர்களுடன் சபரிமலை பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆனால் இந்த நண்பர்கள் குழுவில் ரத்தினகுமாரும் இணைந்து சபரிமலை சென்றுள்ளார் ஒருவேளை கூலி படத்திற்கு மட்டும் நீ பணியாற்ற வேண்டாம் மற்றபடி எங்கு வேண்டுமானாலும் கூடவே வா என்று லோகேஷ் சொல்லியிருப்பார் போலும்.