நடிகை திரிஷாவை பொறுத்தவரை கடந்த 20 வருடங்களில் அவரது திரையுலக பயணம் பலமுறை அவருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. சில முறை அவரை காயப்படுத்தி உள்ளது. கோபப்படுத்தி உள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களாக பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில படங்கள் ரிலீஸ் ஆகி அவரை மீண்டும் உச்சத்தில் ஏற்றி வைத்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே பின்னணி பாடகி சுசித்ரா, தனுஷ், திரிஷா உள்ளிட்ட சிலர் பற்றிய அந்தரங்க தகவல்களை பேட்டியாக கொடுத்து வருகிறார். இதில் நடிகை திரிஷா தனது நண்பர்கள் குரூப்பில் ஏதாவது ஒரு சேலஞ்ச் வைக்கும் போது அதை கட்டாயம் சாதித்து விடுவாராம்.
அப்படி ஒரு நாள் நள்ளிரவில் விஜய் வீட்டு முன்பு ஆட்டம் போட வேண்டும் என்று நண்பர்கள் குரூப் கண்டிஷன் போட அன்று இரவே விஜய் வீட்டின் முன்பு சென்று வெளியே நின்று நடனம் ஆடினாராம் த்ரிஷா. இந்த தகவலையும் சுசித்ரா கூறியுள்ளார். இதுபோன்று அனிருத், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பலரது அந்தரங்க செயல்பாடுகளையும் அவர் புட்டு புட்டு வைத்து வருகிறார். இந்த தகவல் திரிஷாவின் கவனத்திற்கு எட்டியுள்ளது.
அதனால் தான் வெளியூர் படப்பிடிப்பிற்காக சென்று விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்த போது சுற்றி இருந்த நிருபர்கள், மேடம் கில்லி படம் ஒரு மாதம் தாண்டி சூப்பராக ஓடுகிறது என்று அவரை மகிழ்ச்சி படுத்தும் விதமாக ஒரு கேள்வியை கேட்க அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கோபமான முகத்துடன் வேகமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இனி திரிஷாவின் ரியாக்சன் எப்படி இருக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.