உரியடி விஜயகுமார் கதாநாயகனாக களமிறங்கி வெளிவந்திருக்கும் படம் எலக்சன். வேலூரில் இருக்கும் ஊராட்சி ஒன்றியத்தில் கதைக்களம் ஆரம்பம் ஆகிறது. ஊராட்சி ஒன்றிய தேர்தலை வைத்துக்கொண்டு தமிழ்நாடு தேர்தலையும் இந்திய அரசியலையும் துரோகத்தையும் வன்மத்தையும் எதிரொலிக்கிறது இந்த எலக்சன்.
மிகப்பெரிய அரசியல் கட்சி ஒன்றின் தொண்டனாக இருக்கும் ஜார்ஜ் மரியன், இளம் வயது முதல் கட்சிக்காக கடுமையாக உழைத்தாலும் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவரது மகன் நாயகன் விஜய்குமாருக்கு அரசியல் மீது நாட்டம் இல்லை என்றாலும் தனது உறவினரின் தூண்டுதலால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்கிறார்.
அப்பாவின் பேச்சையும் மீறி விஜய்குமார் உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க, அதன் மூலம் அவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் பல பிரச்சனைகள் வருகிறது. அந்த பிரச்சனைகளை சமாளித்து விஜய்குமார் தேர்தலில் வெற்றி பெற்றாரா?, இல்லையா? என்பது தான் ‘எலக்சன்’.
அரசியல் கதிக்கதளம் என்றாலும் தனது கதாபாத்திரத்தை சரியாக உள்வாங்கி நடித்துள்ளார் விஜய்குமார். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் பக்கத்துவீட்டுப் பையனை கண்முன் நிறுத்துகிறார்
நாயகி ப்ரீத்தி அஸ்ராணிக்கு அழுத்தமான கேரக்டர் என்பதும் தன்னால் முடிந்தவரை அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகுமாரின் அப்பாவாக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான், அம்மா நாச்சியாள் சுகந்தி அபாரமாக நடித்துள்ளார். பட்டியலின மக்கள் தலைவர் டேவிட் ஆக நடித்திருப்பவர், திருநங்கையாக வருபவர் எனத் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவரும் கவனம் ஈர்க்கிறார்கள்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். அதிலும், அந்த தேர்தல் பாடல் தனி ரகம். ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு, இதுவரை பார்க்காத லொக்கேஷன்களை தேடி பிடித்து படமாக்கியிருக்கிறார்.
வழக்கமான தமிழ் சினிமா என்றால் அதில் கதாநாயகன் தான் வெற்றி பெறுவார் இது தமிழ் சினிமாவின் ஒன்று தொட்ட வழக்கம் ஆனால் கதாநாயகனுக்கும் சாதாரண குடிமகனுக்கும் உள்ள வேறுபாட்டை இந்த படத்தில் விஜயகுமார் நமக்கு தெள்ளத் தெளிவாக எதார்த்தத்தின் உண்மையை நமக்குத் தெரிவித்திருக்கிறார்
எலக்சன் —–‘ஒரு துரோகத்தின் வெளிப்பாடு