spot_img
HomeCinema Reviewசாமானியன் - விமர்சனம்

சாமானியன் – விமர்சனம்

 

மக்கள் நாயகன் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர், மைம் கோபி, போஸ் வெங்கட் மற்றும் பலர் நடிக்க இன்று வெளியாகியுள்ள படம் சாமானியன்.

கதைக்களம் கிராமத்து ராமராஜன், அவர் சம்பந்தி எம்.எஸ் பாஸ்கர், நண்பர் ராதாரவி மூவரும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய வங்கியை ஹைஜாக் செய்து சில கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு வைக்கின்றனர். அந்தக் கோரிக்கைகள் என்ன, எதற்காக இவர்கள் வங்கி ஹைஜாக் செய்கிறார்கள் என்பதே மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்கள் நாயகன் ராமராஜனின் கலைப்பயணத்தில் 45 ஆவது படமாக சாமானியன் வருகிறது. வழக்கமாக ராமராஜன் என்றால் மாடு, பால், பாட்டு, வயக்காடு, கரகாட்டம், மஞ்சள் சிவப்பு கலர் சட்டைகள் இதுதான் நமக்கு ஞாபகம் வரும். ஆனால் முதன்முறையாக ஒரு ஆக்சன் ஹீரோவாக இந்த படத்தில் களம் இறங்கி இருக்கிறார். இயக்குனரும் திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து மக்கள் நாயகன் ராமராஜனை சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார்.

ராமராஜனும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். மகளிடம் பாசம் காட்டுவதிலும் பேங்க்கை\ ஹைஜாக் செய்து காவல்துறையை மிரட்டுவதும் தன் பாணியில் சிறப்பாக செய்திருக்கிறார். அவர் யார் எதற்காக வங்கியை ஹைஜாக் செய்கிறார் என்ற காரணம் தெரியும் வரும்போது படம் பார்க்கும் அனைவரும் அவர் சொல்வது அவர் செய்வது சரி என்று சொல்ல வைக்கிறது.

கடுகு சிறுத்தாலும் காரத்தில் குறையாது என்பார்கள் அதே போல் ராமராஜன் உடல் பெருத்தாலும் அவர் நடிப்பு அதை மறக்கச் செய்கிறது தமிழ் திரையில் இரண்டாம் ஆட்டம் மக்கள் நாயகன் ராமராஜனுக்கு தொடரும் என்பது நிச்சயம்.

உடன் நடித்த எம்.எஸ் பாஸ்கர்.. இவரைப் பற்றி நாம் சொல்ல வேண்டியது இல்லை. நடிப்பு ராட்சசன்.. அடுத்து நடிகவேள் ராதாரவி.. ஒரு முஸ்லிம் கதாபாத்திரம்.. ராதாரவிக்கு இணை ராதாரவி தான்.. மிகவும் அருமையாக செய்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

இசைஞானி இளையராஜா இல்லாமல் ராமராஜனா ? இருவரும் இணைபிரியாத ஜோடிகள்.. இந்தப் படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா தான் தாலாட்டு பாடலை தாலாட்டு விட்டிருக்கிறார். கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினார் இலங்கை வேந்தன்.. இவர் மட்டுமல்ல கடன் வாங்கிய எல்லோரும் கலங்காமல் இருக்க முடியாது.. இது படத்தின் மையக்கருத்து.. மீதி விஷயங்களை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..

 

சாமானியன் ; மக்களின் குரல்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img