நடிகர் அரவிந்த்சாமி 90களில் மணிரத்தினம் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து அவரது படங்களில் நடித்து வெற்றி பட நாயகனாக வலம் வந்தார். அதன்பிறகு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்கிய அவரை இயக்குனர் மோகன் ராஜா தான் இயக்கிய தனி ஒருவன் படத்தில் ஒரு வித்தியாசமான வில்லனாக அறிமுகப்படுத்தி அவருக்கு மீண்டும் மறுவாழ்வு தந்தார்.
அந்த படத்தில் அரவிந்த்சாமியின் அலட்டல் இல்லாத நடிப்பு ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் பல படங்களில் நடித்து வருகிறார் அரவிந்த்சாமி. அதேசமயம் அரவிந்த்சாமி பிஸியாக இருந்த சமயத்தில் தான் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா வின் கதாபாத்திரத்தில் நடிக்கும்படி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் சில காரணங்களால் அவரால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை. அதற்கு முன்பு பசுபதி, கன்னட நடிகர் கிச்சா சுதீப், தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஆகியோருக்கும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தேடி சென்றது, ஆனாலும் சில காரணங்களால் அவர்களால் நடிக்க முடியவில்லை,
அதன் பிறகு தான் அந்த வாய்ப்பு நடிகர் எஸ் ஜே சூர்யாவுக்கு சென்றது, அதற்கு முன்பு இருந்த எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு வேறு,, மாநாடு படத்திற்குப் பிறகு அவருடைய அசத்தலாக நடிப்பே வேறு என அந்த படத்தில் இருந்து எஸ் ஜே சூர்யாவிற்கு இரு மடங்கு ரசிகர்கள் உருவானார்கள் என்பது வரலாறு.