நடிகர் சூர்யாவுக்கு அவரது திரையுலகில் சமீபத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் ‘சூரரைப்போற்று’. ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்த படத்தை இயக்கினார். இந்த படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதும் பெற்றது. மிகப்பெரிய வெற்றி படமாக இது அமைந்ததை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் சுதா கொங்கரா டைரக்ஷனில் புறநானூறு என்ற படத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.
இதற்கிடையே சுதா கொங்கரா ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து சூரரைப்போற்று ரீமேக் படத்தை முடித்து விட்டார். இதை தொடர்ந்து அவர் புறநானூறு படத்தை ஆரம்பிப்பார் என எதிர்பார்த்த நிலையில் தற்போது இந்த படத்தை துவங்க முடியாத சிக்கல் ஏற்பட்டு படமே கைவிடப்படும் நிலைமை உருவாகியுள்ளது.
காரணம் இந்த படத்தின் மையக்கருவே பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி தான் உருவாகி இருக்கிறது. ஆனால் தற்போது சூர்யா ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். அவரது மனைவி ஜோதிகாகவும் இந்தி படங்களில் நடிக்கிறார். தங்களது குடும்பத்தையே மும்பைக்கு ஷிப்ட் பண்ணி விட்டார் சூர்யா.
இப்படி ஹிந்தி படங்களில் நடிக்க தயாராகிக் கொண்டே ஹிந்தி எதிர்ப்பு குறித்த படத்தில் நடித்த சரியாக இருக்காது என்பதால் தான் சூர்யா இந்த படத்தின் கதையை வேறு விதமாக மாற்றுங்கள் என்று கூறினாராம். ஆனால் சுதா கொங்கரா படத்தின் மையக் கருவே இதுதான் என்பதால் மாற்ற முடியாது எனக் கூறிவிட்டாராம். அப்படி என்றால் இந்த படத்தில் நடிக்க முடியாது வேறு கதையை வேண்டுமானால் தயார் செய்து விட்டு வாருங்கள் என்று கூறி விட்டாராம் சூர்யா.
இதற்கு முன்னதாக நடிகர் விஜய் பல வருடங்களுக்கு முன்பு கொக்கோகோலா குளிர்பான விளம்பரத்தில் நடித்தார் அதன்பிறகு அந்த குளிர்பானத்திற்கு எதிராகவே கத்தி படத்தில் புரட்சிகர வசனம் பேசி நடித்து அது பொதுமக்களிடம் கிண்டலுக்கு ஆளானது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹிந்தி தெரியாத போடா என்று பகிரங்கமாக முழக்கமிட்டார். ஆனால் அதன் பிறகு ஒரு இந்தி படத்தில் நடித்தார். அப்பொழுது அவருடைய பெயரும் சிரிப்பாக சிரித்தது. அது போன்று தன்னால் செய்ய முடியாது என்பதை உணர்ந்த சூர்யா புறநானூறு படத்தையே கிடப்பில் போடும் முடிவுக்கு வந்து விட்டாராம்.