மிகப்பெரிய தனியார் நிறுவனத்தின் பள்ளியில் பி.டி மாஸ்டராக பணிபுரியும் ஹிப் ஹாப் ஆதி ஒரு பயந்த சுபாவம் உடையவர். காரணம் அவருடைய தாயார் தேவதர்ஷினி ஹிப் ஹாப் ஆதியின் ஜாதகத்தில் மிகப்பெரிய கண்டம் இருப்பதால் அவரைப் பொத்தி பொத்தி மிகவும் அடக்கமான பிள்ளையாக வளர்க்கின்றனர்.
இந்நிலையில் இவர் அண்டை வீட்டின் வசிக்கும் அனாமிகா கவர்ச்சியான உடை அணிந்து பள்ளியின் ஆண்டு விழாவிற்கு செல்லும்போது அவரை நான்கு கயவர்கள் மானபங்கம் செய்ய முயற்சிக்க அதில் தப்பிக்கிறார் அனாமிகா. ஆனால் அதை வீடியோவாக எடுத்த கயவர்கள் சமூக வலைத்தளத்தில் உலாவை விட அனாமிகா தற்கொலை செய்து கொள்கிறார்.
இதற்கு காரணம் பள்ளி மற்றும் கல்லூரியின் சேர்மன் தியாகராஜன் என்று கடிதம் தற்கொலை கடிதத்தில் எழுதி வைக்க, அதை கைப்பற்றிய தியாகராஜன் கடிதத்தை சாம்பல் ஆக்கி விடுகிறார்.
இதை அறிந்த ஹிப்ஹாப் ஆதி அவர் மீது கொலை வழக்கு தொடர தன் பண பலத்தால் தியாகராஜன் அனைத்தையும் சமாளிக்க இறுதியில் ஹிப் ஹாப் ஆதி ஒரு மிகப்பெரிய உண்மையை உடைக்க படம் பார்க்கும் அனைவரும் ஒரு அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். அது என்ன தெரிந்து கொள்ள பாருங்கள் பி.டி சார்.
ஹிப் ஹாப் ஆதிக்கு சிறுவர்களின் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அவர்களை தன் பக்கம் இருக்க பி.டி மாஸ்டராக படத்தில் களம் இறங்கி குழந்தைகளோடு குழந்தையாக பாட்டுப் பாடி ஆட்டமாடி பார்க்கும் ரசிகனை பரவசப்படுத்துகிறார்.
ஒரு பக்கம் இவரை குழந்தை என்று நினைத்தால் மறுபக்கம் கோபத்தில் கல்லூரியில் சேர்மன் தியாகராஜனை கன்னத்தில் அறையும் காட்சி நான் குழந்தைகளை ஹீரோ மட்டும் இல்ல ஆக்சன் ஹீரோவும் தான் என்று நிரூபிக்கிறார்
தாய் சொல்லைத் தட்டாத மகனாக பாசத்தை பொழிகிறார்
பாலியல் வன்கொடுமைக்காக அனாமிகாவின் சார்பில் இவர் போராடும் போது தாய் தேவதர்ஷினி, “பொம்பளைன்னா பொது இடத்தில் வேலை செய்ற இடத்துல பஸ் ஸ்டாண்ட்ல, ரேஷன் கடையில, எல்லா இடத்திலும் பொம்பளைன்னா தொட தான் செய்வான். இதெல்லாம் எங்களுக்கு பழகிப்ப போச்சு. சகிச்சிட்டு தான் வாழ்ந்துட்டு இருக்கோம் அப்படின்னு சொல்லும் போது,
ஒரு ஐந்து வயது பெண் குழந்தை தொடக்கூடாத இடத்தில் தன்னை ஆட்டோவில் கூட்டி செல்லும் ஆட்டோ டிரைவர் தொட்டால் தப்பா என்று கேட்கும் போது, அப்போது ஹிப் ஹாப் ஆதி தன் தாயிடம் பேசும் வசனம் ஒவ்வொரு பெண் குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்கள் கண்ணில் நீர் சுரக்கும். குணச்சித்திரத்திலும் நான் சளைத்தவன் இல்லை என்று இக்காட்சியில் நிருபித்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி.
நாயகன் மட்டுமில்லாமல் இப்படத்திற்கு இசையும் ஹிப்பாப் ஆதி தான். அதில் ஒரு சிறப்பு என்னவென்றால் அவர் கலை உலக இசை வாழ்க்கையில் இது அவருக்கு 25 வது படம். வாழ்த்துக்கள் ஹிப் ஹாப் ஆதி சார்..
நாயகி பள்ளி ஆசிரியை. நாயகனை சுற்றாமல் நாயகன் இவரை சுற்றுகிறார். பாட்டு பாடுகிறார். தேவைப்படும்போது நாயகனுக்கு தோள் கொடுக்கிறார். இவர் தந்தையாக பிரபு மிகப்பெரிய வழக்கறிஞர். இவர் கதாபாத்திரம் சிறப்பு என்றாலும் காட்சி குறைவு.
நீதிபதியாக வரும் பாக்கியராஜ் தன் பங்குக்கு சிறப்பாக செய்தாலும் அவரின் அறிமுகக் காட்சி சில்லறைத்தனமான காட்சி. அதை இயக்குனர் சரி செய்து இருக்க வேண்டும். மறந்து விட்டார்..
தேவதர்ஷினியின் கணவராக வரும் பட்டிமன்றம் ராஜா காமெடிக்காக கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு செய்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்பட்டியான் தியாகராஜன் இந்த படத்தில் கல்லூரி சேர்மன் ஆக நடித்து மீண்டும் அடுத்த ரவுண்டு வருவேன் என்று நிரூபித்திருக்கிறார்.
இறுதிக் காட்சியில் வக்கீலாக வரும் மதுவந்தி நீதிமன்றத்தையும் பார்க்கும் பார்வையாளரையும் தன் வாதத் திறமையால் கட்டிப்போட்டு விடுகிறார். இவரின் நடிப்பில் அப்படியே தன் தந்தையை பிரதிபலிக்கிறார். யார் இவர் தந்தை.? 80 90களில் மிகப்பெரிய நகைச்சுவை நாயகனாக வலம் வந்து தற்போது குணச்சித்திரம், வில்லன் என பல கதாபாத்திரங்களில் நம்மை மகிழ்வித்து திரு ஒய் ஜி மகேந்திரனின் மகள் தான் மதுவந்தி, இவர் நடிப்பில் தன் தந்தையின் கரம் பிடித்து வந்ததால் நீதிமன்ற காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார், இவரின் உடல் மொழி ஒரு நிஜ வக்கீலாகவே நமக்கு தெரிகிறது,
படத்தயாரிப்பு திரு ஐசரி கே கணேஷ்..
பிடி சார்—– இது விளையாட்டு இல்ல– பாடம்