பொதுவாகவே வாரிசு நடிகர்கள் என்கிற கோட்டாவில் அறிமுகமாகும் பெரும்பாலான நடிகர்கள் வந்த சுவடு தெரியாமல் சில நாட்களில் காணாமல் போய்விடுவார்கள். சிலர் மட்டும் தங்களது திறமையை பயன்படுத்தி நீண்ட காலம் தாக்கு பிடிப்பார்கள். இயக்குனர் பாசிலின் மகனாக அறிமுகமான நடிகர் பஹத் பாசில் இன்று தென்னிந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
அவர் நடித்தாலே அந்த படத்திற்கு ரசிகர்கள் கூட்டமாக வருகிறார்கள். அந்த படங்களுக்கு என தனி வியாபார வேல்யூவும் கூடி விடுகிறது. இந்த நிலையில் தான் 41 வயதான பஹத் பாசிலுக்கு ஏடிஎச்டி என்கிற குறைபாடு இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த தகவலையும் அவரே தான் வெளிப்படுத்தியுள்ளார்.
அதாவது இந்த பாதிப்பு உள்ளவர்கள் பெரும்பாலும் கவனக்குறைவாக இருப்பார்களாம். எந்த ஒரு விஷயத்திலும் அதிக நேரம் கவனம் செலுத்த முடியாதாம். குழந்தை பருவத்திலேயே இதை கண்டுபிடித்து இருந்தால் சரி செய்து இருக்கலாம். இப்போது பெரிய அளவில் இது வளர்ந்து விட்டதால் சரி செய்ய முடியாது என்று சொல்கிறார்கள்.
ஆனால் இப்படி இந்த கவனக்குறைவு நோய் இருந்தும் கூட தனது படங்களில் அவ்வளவு நேர்த்தியாக கவனமாக பஹத் பாசில் நடிக்கிறார் என்றால் நிச்சயமாக அவர் இந்த நோய் குறைபாட்டை எல்லாம் ஊதி தள்ளி விடுவார் என்று உறுதியாக சொல்லலாம்.